திமுகவுடன் கூட்டணி இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் இப்போதைக்கு திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்த பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் கட்சியின் அகிலஇந்திய பொதுச் செயலாளரும் தமிழக, பாண்டிச்சேரி மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான கமல் நாத் கூறியுள்ளார்.
சமீபத்தில் தமிழக காங்கிரஸ் விவகாரங்களை கவனித்து வந்த ரமேஷ் சென்னிதலா நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக கமல் நாத்தைசோனியா நியமித்தார். மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் சோனியாவுக்கு மிக நெருக்கமானவர்.
இந்தப் பொறுப்பை ஏற்ற பின்னர் முதல்முறையாக கமல் நாத் இன்று சென்னை வந்தார். அவருடன் ஜி.கே. வாசனும் உடன் வந்தார்.
விமான நிலையத்தில் அவரை காங்கிரஸ் கட்சியின் பல்வேறு கோஷ்டிகளும் வரவேற்றன. காங்கிரஸ் மாநிலத் தலைவர்சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் மற்றும் தங்கபாலு, பிரபு உள்ளிட்டோர் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்துவரவேற்றனர்.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய கமல் நாத், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் கடும்கோஷ்டிப் பூசல் இருப்பதாக பேசுகிறார்கள். இது ஒரு குடும்பப் பிரச்சனை. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆர்வ மிகுதியால்செயல்படுவதால் பிரச்சனை ஏற்படுகிறது. இதெல்லாம் பேசி சரி செய்யப்படும்.
தமிழகத்தில் இப்போதைக்கு திமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை. திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் ஆட்சிகளால்வெறுத்துப் போயுள்ள மக்கள் இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது என்றார்.
இந் நிலையில் ஜார்க்கண்ட், பீகார் மாநில காங்கிரஸ் விவகாரங்களை கவனித்து வந்த ஜி.கே. வாசனை பதவி இறக்கம் செய்துள்ளார்சோனியா காந்தி. அவருக்கு அந்தமான் நிகோபார் தீவுகளின் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி தரப்பட்டுள்ளது.
அடுத்த தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணி உறுதி என்று பேச்சப்பட்டு வரும் நிலையில் கமல்நாத்தின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.கூட்டணி விஷயத்தில் பா.ஜ.கவை கடைசி நிமிடம் வரை சஸ்பென்சிலேயே வைத்திருக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications