கிரிக்கெட்டுக்காக ஆடுகளை கொன்றவர் படுகொலை
சென்னை:
கிரிக்கெட் விளையாட்டுக்கு இடையூறாக மைதானத்தில் மேய்ந்து கொண்டிருந்த சில ஆடுகளை வாலிபர்கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்றார். இதையடுத்து அவரை, ஆடுகளுக்குச் சொந்தக்காரர்கள் வெட்டிப்படுகொலை செய்தனர்.
சென்னை மைலாப்பூர் லாலா தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் கிரிக்கெட் வீரர். இப்பகுதியில் உள்ளமாநகராட்சிக்குச் சொந்தமான மைதானத்தில் அடிக்கடி லோக்கல் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும். இந்தப்போட்டிக்கான ஆடுகளத்தை (பிட்ச்) தயாரிப்பது பாலாஜியின் வேலை.
அதுபோல பிட்ச் தயாரித்துவிட்டு அதை யாரும் சிதைத்துவிடாமல் கண்காணித்து வந்தார் பாலாஜி. அப்போது சிலஆடுகள் மைதானத்தில் ஊடுருவி மேய்ந்தன.
இதையடுத்து வெறி கொண்ட பாலாஜி உருட்டுக் கட்டையால் அந்த ஆடுகளை அடித்தார். இதில் நான்கு ஆடுகள்அந்த இடத்திலேயே மண்டை உடைந்து இறந்தன. இதையடுத்து பாலாஜி தப்பியோடிவிட்டார்.
இதைக் கேள்விப்பட்ட ஆடுகளுக்குச் சொந்தக்காரர்களான ராஜேஸ்வரி, அவரது சகோதரர்முனுசாமி, தீபக் மற்றும்இன்னொருவர் என நான்கு பேரும் அங்கு வந்தனர். இறந்து கிடந்த ஆடுகளைப் பார்த்தும் கொலை வெறி ஏறியது.
இதையடுத்து இந்த நால்வரும் சேர்ந்து பாலாஜியை தேடிப் பிடித்து அடித்து, உதைத்தனர். அவர்களிடமிருந்து தப்பபாலாஜி ஓடியுள்ளார். விடாமல் துரத்திய 4 பேரும், பாலாஜியை அரிவாள் மற்றும் கத்திகளால் வெட்டினர்.ராஜேஸ்வரியும் சேர்ந்து அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் பாலாஜி நடு ரோட்டில் துடிதுடித்து இறந்தார்.
இந்தக் கொலை மைலாப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் 4 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications