ஊழல் நடக்கவில்லை: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னியாகுமரிக் கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவியதில், ஊழல் ஏதும் நடைபெறவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதிதெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1995ம் ஆண்டு வள்ளுவர் சிலை அமைக்கும் பணிகள்நிறுத்தப்பட்டது. நிதிப் பற்றாக்குறை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது ஜெயலலிதா ஆட்சிநடந்தது.
பின்னர் 1997ம் ஆண்டு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது திமுக ஆட்சி நடந்தது. மீண்டும் பணிகள்தொடங்கியபோது சிற்பி கொடுத்த திருத்திய மதிப்பீட்டின் அடிப்படையில்தான் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிதி தொடர்பாக ஸ்தபதி கணக்கு காட்டவில்லை என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர ஊழல் நடந்துள்ளதாகவோ அல்லதுமோசடி நடந்துள்ளதாகவோ கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்படவில்லை என்று கூறியுள்ளார் கருணாநதி.












Click it and Unblock the Notifications