மதுரையில் புட்டபர்த்தி சாய்பாபா: பக்தர்களுக்கு அருளாசி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கொடைக்கானல் செல்லும் வழியில் புட்டபர்த்தி சாய்பாபா மதுரையில் தங்கி பக்தர்களுக்கு அருளாசிகள்வழங்கினார்.
பெங்களூரிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த சாய்பாபா, ஸ்ரீசத்ய சாய் நகரில் உள்ள பிரசாந்திநிலையத்திற்கு வருகை தந்தார்.
அங்கு பக்தர்களுக்கு அருளாசிகள் வழங்கினார். கூடுதல் டி.ஜி.பி. திலகவதி, மதுரை மாவட்ட கலெக்டர்சந்திரமோகன், தொழிலதிபர் ஏ.சி. முத்தையா உள்ளிட்டோர் சாய்பாபாவிடம் ஆசிகள் பெற்றனர்.
மதுரை தவிர பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் சாய்பாபாவைக் காண இங்குவந்திருந்தனர்.
சாய்பாபா வருகையையொட்டி மதுரை பிரசாந்தி நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications