ஜூலை 15ம் தேதி காங்கிரசில் ப.சிதம்பரம் இணைகிறார்
சென்னை:
சென்னையில் வரும் ஜூலை 15ம் தேதி நடக்கும் காமராஜர் பிறந்த நாள் விழாவில் சோனியா காந்தி முன்னிலையில் ப.சிதம்பரம் காங்கிரஸ்கட்சியில் இணைவார் என்று தெரிகிறது. அவரது காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைக் கட்சியும் காங்கிசுடன் இணையும்.
சில தினங்களுக்கு முன் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி டெல்லிக்கு அழைத்துப் பேசினார். அப்போதே இந்த இணைப்புஉறுதியாகிவிட்டதாகத் தெரிகிறது. இப்போது அமெரிக்காவில் உள்ள சிதம்பரம் தமிழகம் திரும்பியதும் தனது கட்சி நிர்வாகிகளைஅழைத்துப் பேசிவிட்டு இணைப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
இந்த இணைப்பை அடுத்து சிதம்பரத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி அளிக்கப்படும் அல்லது தேசிய அளவில் மிக முக்கியமானபதவி தரப்படும் என்று தெரிகிறது. ப.சிதம்பரத்தை மாநிலத் தலைவராக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான கமல்நாத்,சோனியா காந்தியை நெருக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இளங்கோவன் வரவேற்பு:
தமிழக காங்கிரஸ் தலைவராக சிதம்பரத்தை சோனியா காந்தி நியமித்தால் வரவேற்பேன். சோனியாவின் முடிவுகளுக்கு முழுவதுமானகட்டுப்படுவேன் என செயல் தலைவர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அவர் இணையப் போகிறாரா இல்லையா என்று இதுவரை எனக்கு தெரியாது. ஆனால், அவரை நான் கடந்த 2 ஆண்டுகளாகவேகாங்கிரசுக்கு வருமாறு நேரில் சந்தித்து அழைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் வந்தால் காங்கிரஸ் நிச்சயம் பலம் பெறும். அவரைதலைவராக்கி சோனியா காந்தி அறிவித்தால் வரவேற்பேன்.
சிதம்பரம் வருவதால் காங்கிரசில் கோஷ்டிகளின் எண்ணிக்கை தானே கூடும் என்கிறார்கள். பத்தோடு பதினொன்றாக இருக்கட்டுமே.
தமிழக காங்கிரசுக்கு இரு தலைவர்கள் தேவையில்லை (சோ.பா, இளங்கோவன்) என கமல் நாத் கூறியிருக்கிறார். அவரை யாரோதூண்டிவிட்டிருக்கிறார்கள். தூண்டி விட்டவர்கள் வெளியே எங்கும் இல்லை. எங்கள் கட்சிக்குள் தான் இருக்கிறார்கள். எங்கள் கட்சியில்பிரச்சனையே உள்ளே இருப்பவர்களால் தான் என்றார் இளங்கோவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications