மரத்தின் மீது விடிய விடிய..: கோடி ரூபாய் நகை கொள்ளையடித்த திருடன் பட்டபாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் திருச்சி நகைக் கடை அதிபரைக் கடத்தில் ரூ. 1.25 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்த டிரைவர் சீதாராமன்,போலீஸாரிடமிருந்து எப்படி தலைமறைவாக இருந்தேன் என்பது குறித்து திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த நகைக் கடை அதிபர் சுபாஷ் ஜெயின் என்பவர், சில வாரங்களுக்கு முன் சென்னை வந்தார். தனது நண்பரின் காரைஎடுத்துக் கொண்டு சில நாட்கள் சென்னையில் பல நகைக் கடைகளுக்குச் சென்று ரூ. 1.25 கோடிக்கு தங்க, வைர, வெள்ளி நகைகள்வாங்கினார்.

காரை நண்பரின் டிரைவர் சீதாராமன் தான் ஓட்டினார். நகைகளை வாங்கி முடித்த பின் ஊர் திரும்புவதற்காக, காரில் எழும்பூருக்கு வந்தார்.

அப்போது டிரைவர் சீதாராமன் மற்றும் அவரது கூட்டாளி சூர்யா ஆகியோர் ஜெயினைக் கடத்திச் சென்று நகைகளைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பினர்.

போலீஸாரின் தீவிர வேட்டையில், சீதாராமனின் இரண்டு சகோதரகள் முதலில் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்புநகைகள் மீட்கப்பட்டன.

ஆனால், மும்பைக்குத் தப்பிச் சென்ற சீதாராமன் இப்போது தான் பிடிபட்டுள்ளார். சிறப்புப் படை போலீசார் மும்பை சென்று அவரைப்பிடித்து வந்துள்ளனர்.

இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்தது எப்படி என்பது குறித்து சீதாராமன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

காரைக்குடிக்கு அருகே உள்ள கல்லூர் தான் சீதாராமனின் சொந்த ஊராகும். கல்யாணமாகாத அவர் வேலை தேடி சென்னை வந்துள்ளார்.திருமங்கலம் பகுதியில் உள்ள ஒருவரிடம் டிரைவராக வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கு 3 நேர இலவச சாப்பாடும், ரூ. 3000 சம்பளமும்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் அவரது பழைய நண்பர் சூர்யாவை சந்தித்துள்ளார். தான் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதாகவும், எனவேயாரிடமாவது வேலைக்கு சேர்த்து விடுமாறும் கோரியுள்ளார் சூர்யா.

அதற்கு, நான் திருச்சி நகைக் கடைக்காரர் ஒருவருக்கு இப்போது கார் ஓட்டி வருவதாக கூறியுள்ளார் சீதாராமன். இதைக் கேட்ட சூர்யாவுக்குகுறுக்குப் புத்தி வந்துள்ளது. அந்த நகைக் கடைக்காரரிடம் கொள்ளைடித்தால் என்ன என்று சீதாராமனிடம் கேட்டுள்ளார்.

முதலில் பயந்த சீதாராமன் பிறகு அதற்கு ஒத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து இருவரும் திட்டமிட்டு ஜெயினிடம் கொள்ளையடித்தனர்.பின்னர் கொள்ளையடித்ததில் பாதியை தான் எடுத்துக் கொண்டு மீதியை சீதாராமனிடம் கொடுத்துள்ளார் சூர்யா. பிறகு இருவரும்தனித்தனியாகப் பிரிந்து சென்று விட்டனர்.

நகைகளுடன் திருப்பூருக்குச் சென்ற சீதாராமன் அங்கு வசித்து வரும் தனது சகோதரி மீனாவிடம் கொஞ்சம் நகைகளைக் கொடுத்தார்.பின்னர் இன்னொரு சகோதரி பானுமதியிடம் கொஞ்சம் நகைகளைக் கொடுத்தார்.

பிறகு திருப்பூரிலேயே பதுங்கியிருந்தபோது, அதை மோப்பம் பிடித்த போலீசார் அங்கு வந்துவிட்டனர்.

இதையடுத்து இரவோடு இரவாக ஒரு தென்னந்தோப்புக்குள் பதுங்கியுள்ளார். யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காக ஒரு மரத்தின் மீதுஏறி உட்கார்ந்து கொண்டார். விடிய விடிய மரத்தின் உச்சியில் உட்கார்ந்திருந்த அவர் விடிந்ததும் இறங்க நினைத்தபோது, ஒரு பெண் தனதுஆடுகளை மேய விட்டுவிட்டு மரத்தின் கீழே வந்து அமர்ந்து கொண்டார்.

இதனால் இறங்க முடியாமல் தவித்தார். பிற்பகலில் தான் அந்தப் பெண் அங்கிருந்து சென்றார்.

விடிய விடிய மரத்தின் மீது அமர்ந்திருந்த சீதாராமன் பின்னர் கீழே இறங்கி பஸ், லாரிகள், ரயில் என மாறி மாறி மும்பைக்குச் தப்பினார்.மும்பையில் வேலை தேடிக் கொண்டிருந்தபோதுதான் அதையும் மோப்பம் பிடித்த சென்னைத் தனிப் படை போலீஸாரிடம் பிடிபட்டுள்ளார்.

இதற்கு முன் நடிகை நிரோஷாவிடம் டிரைவராகப் பணியாற்றியுள்ளார் சீதாராமன். ஆனால், அவரது மிட்சுபிசி லேன்சர் காரை கண்டஇடத்திலும் போய் மோதிவிட்டு வந்தார். மேலும் டிவி சூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளிடம் வழிந்துள்ளார். இதையடுத்து அவரைநீக்கிவிட்டார் நிரோஷா.

இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ராயப்பேட்டையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது சில கம்ப்யூட்டர்களைத் திருடியுள்ளாசீதாராமன். இதற்காக சிறைத் தண்டனையும் அனுபவித்துள்ளார்.

அதன் பிறகு திருந்தி வாழ நினைத்து ஒழுங்காக டிரைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் நண்பர் சூர்யாவின் பேச்சைக் கேட்டுமீண்டும் கொள்ளையில் ஈடுபட்டு சிக்கியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+