டான்சி பயத்துடன் 3வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அதிமுக ஆட்சி
சென்னை:
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து இன்று மூன்றாவது ஆண்டில் அடிஎடுத்து வைத்துள்ளது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்று கடந்த 2001ம் ஆண்டுமே 16ம் தேதி ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது. தற்போது 2 ஆண்டுகளை முடித்துள்ளது.
இதையொட்டி இன்று காலை போயஸ் தோட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா அதிமுக அரசின் இரண்டாண்டு சாதனைமலரை வெளியிட்டார்.
தனக்கு ராசியான பச்சை நிற சேலையில் வந்த ஜெயலலிதா, பச்சை நிற அட்டையுடன் இருந்த மலரின் மீது, பச்சைநிறத்தில் கட்டப்பட்டிருந்த ரிப்பளை அவிழ்த்து அந்த ஆண்டு மலரை வெளியிட்டார்.
அதை பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டு ஜெயலலிதாவின் காலில் விழுந்துஎழுந்தார். முன்னதாக பச்சை நிறத்தில் ஒரு பூங்கொந்தை ஜெயலலிதாவிடம் வழங்கினார் பன்னீர்.
அடுத்தபடியாக திண்டுக்கல் எம்.பியான சீனிவாசனும் பச்சை நிற பொகேவை ஜெயலலிதாவிடம் கொடுத்து காலில்விழுந்து வணங்கினார்.
அவரைத் தொடர்ந்து அதிமுகவின் அவைத் தலைவர் புலமைப்பித்தனும் காலில் விழுந்து எழுந்தார்.
அதிமுக அரசு இரண்டாடுகள் நிறைவு செய்துள்ளதையடுத்து தமிழக பத்திரிகைகள் அனைத்திலும் எட்டு பக்கவிளம்பரத்தை தமிழக அரசு கொடுத்துள்ளது. அதிலும் எல்லாமே பச்சை மயம் தான்.
கடந்த 2 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி மிகவும் பரபரப்பான நிகழ்வுகளைக் கொண்டதாகவே அமைந்தது.
ஜெயலலிதா முதல்வர் பொறுப்பேற்றதும் கருணாநிதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னை மேயர்பொறுப்பிலிருந்து ஸ்டாலின் அதிரடி சட்டம் மூலம் அகற்றப்பட்டார்.
காவிரிப் பிரச்சினையில் ஓயாத வழக்குகள், மோதல்கள், வீரப்பன் விவகாரம், கட்டாய மத மாற்றத் தடுப்புச் சட்டம்,இடைத் தேர்தல்களில் வெற்றி, கோவில்களில் அன்னதானத் திட்டம்,
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து, பொடாவில் வைகோ, நெடுமாறன், நக்கீரன் கோபால் அதிரடி கைதுகள்,சென்னையில் கண்ணகி சிலை அகற்றம், ராணி மேரிக் கல்லூரியை இடிக்க முயற்சி என பல விஷயங்கள் இதில்ஹை-லைட்டானவை.
இப்போது டான்சி தீர்ப்பு என்னும் கத்தி தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்க, தனது ஆட்சியின் 3வது ஆண்டில்அடி எடுத்து வைத்துள்ளார் ஜெயலலிதா. இந்தத் தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.இதனால் இரண்டாண்டு ஆட்சியைக் கொண்டாட மாநில அளவில் பெரிய நிகழ்ச்சிகள் எதுவும் ஏற்பாடுசெய்யப்படவில்லை.
வழக்கமாக ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் தான் இது போன்றசாதனை மலர் வெளியீட்டு விழா நடப்பது வழக்கம். ஆனால், இன்று தனது போயஸ் தோட்ட இல்லத்திலேயேவெகு சிம்பிளாக விழாவை முடித்துக் கொண்டார் ஜெயலலிதா.
| |||||||||||||||||||
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications