பொல்லாதவர்கள் கையில் சிக்கி விட்டது பொடா: கருணாநிதி வருத்தம்
சென்னை:
பொடா சட்டம் பொல்லாதவர்களின் கையில் சிக்கி விட்டது. எனவே அந்த சட்டத்தை திரும்பப் பெறுவதைத் தவிரவேறு வழியில்லை என்று திக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் பத்திரிக்கை சுதந்திர பாதுகாப்பு குழு என்ற அமைப்பின் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடந்தது.இதில், திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் நல்லகண்ணுஉள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரன்ட்லைன் ஆசிரியரும் இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான என். ராம் தலைமை வகித்தார்.கருணாநிதி பேசுகையில், பொடா சட்டத்திற்கு ஆதரவாக திமுக வாக்களித்தபோது, நான் கொடுத்தஉறுதிமொழியை இப்போது வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். ஏனென்றால், பொடா சட்டம் இப்போதுபொல்லாதவர்களின் கையில், தகாதவர்களின் கையில் சிக்கி விட்டது. எனவே இந்த சட்டத்தை வாபஸ் பெறுவதைத்தவிர வேறு வழியில்லை.பத்திரிக்கை சுதந்திர பாதுகாப்பு என்று பெயர் போட்டுள்ளார்கள். அதில் பத்திரிக்கை என்ற வார்த்தையை எடுத்துவிட வேண்டும். ஏனென்றால் இப்போது, தமிழகத்தில் சுதந்திரத்தையே பாதுகாக்க வேண்டிய அவல நிலைஏற்பட்டுள்ளது.
பத்திரிக்கைகள் மீது தொடர்ந்து அவதூறு வழக்குகள் போடப்படுகின்றன. பத்திரிக்கைச் சுதந்திரம் நசுக்கப்பட்டுவருகிறது. இவற்றிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இங்கு குரல் கொடுத்திருக்கின்றன என்றார்அவர்.
டாக்டர் ராமதாஸ் பேசுகையில், பத்திரிக்கைச் சுதந்திரத்தைப் பாதுகாக்க எங்கு வேண்டுமானாலும், எப்போதுவேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் குரல்கொடுக்க, போராட நானும், பாமகவும் தயாராகஇருக்கிறோம்.
அரசியல்வாதிகளின் கடமையை உணர்த்தும் பொறுப்பில் பத்திரிக்கைகள் உள்ளன. அப்படிப்பட்டபத்திரிகைகளுக்கு எதிராக பொடா சட்டம் பயன்படுத்துவதை கடுமையாக கண்டிக்கிறேன் என்றார்.
இளங்கோவன் பேசுகையில், பத்திரிக்கைளில் அவதூறாக எழுதினார்கள் என்று கைது செய்கிற இவர்களைஇனியும் விட்டு வைத்தால், பத்திரிக்கைகளை நடத்தினாலே கைது செய்வார்கள் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications