21ம் தேதி ஸ்டிரைக்: வங்கிகள், தொலைத் தொடர்பு, அரசு அலுவலகங்கள் இயங்காது- டாக்டர்களும் போராட்டம்
சென்னை:
வரும் 21ம் தேதி தமிழகம் உள்பட நாடு முழுவதும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இதனால் வங்கிகள், மத்திய- மாநில அரசு அலுவலகங்கள், தொலைத் தொடர்பு, தபால் துறை, இன்சூரன்ஸ்நிறுவனங்கள், அணுமின்துறை, துறைமுகங்களின் ஊழியர்களும், ஆட்டோ, வேன் டிரைவர்களும்பங்கேற்கின்றனர். இதனால் இந்தத் துறைகள் இயங்காது. ஆட்டோ, வேன் ஓடாது. மேலும் தொழிலாளர்கள்பணிக்கு வராமல் புறக்கணித்தால் பஸ், ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படும். ஜவுளி ஆலைகள் உள்பட பலதனியார் நிறுவனங்களின் செயல்பாடும் ஸ்தம்பிக்கவுள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் அன்றைய தினம் பஸ், ரயில் மறியல் போராட்டங்களை நடத்தவும் விவசாயிகள்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
இதே தினத்தில் இருந்து தான் டாக்டர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
மத்திய, மாநில அரசுகளின் தனியார்மயக் கொள்கை, லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைதனியாருக்கு விற்பது, பி.எப். வட்டியைக் குறைத்தது, போனஸ் தொடர்பான விதிகளைக் கடுமையாக்கியதுஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் 21ம் தேதி இந்தப் போராட்டத்தைநடத்துகின்றன.
இதில் தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் மத்திய, மாநில அரசு ஊழியர்களும் 10 லட்சம் தனியார் துறை ஊழியர்களும்தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபடுவர் என சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் ரங்கராஜன் தெரிவித்தார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது, அமைப்பு சாரா ஊழியர்களும் இதில் முழுஅளவில் ஈடுபடுவர். இதனால் மத்திய, மாநில அரசு அலுவலங்கள் இயங்காது. வங்கிகள் செயல்படாது.இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூடப்படும். ஆட்டோக்கள் ஓடாது. வேன்கள் ஓடாது என்றார்.
இந்தப் போராட்டத்தை அடக்குமுறை மூலம் நசுக்க அரசு நினைத்தால் அதனால் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுபோராட்டம் தான் தீவிரமாகும் என்றும் எச்சரித்தார்.
ஆட்டோ சங்கங்கள் பங்கேற்பு:
21ம் தேதி இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்டோ சங்கங்களும் பங்கேற்கப் போவதாகஅறிவித்துள்ளன. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும்ஆட்டோ டிரைவர்கள் அறிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications