அழகிரி- ஸ்டாலின் மோதலில் பலியான தா.கி.
சிவகங்கை:
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலைக்கு திமுக உட்கட்சி மோதலே காரணம் என்று உறுதியாகத்தெரிகிறது.
திமுகவின் முன்னணித் தலைவர்களில ஒருவரான தா.கிருட்டிணன், கருணாநிதி, இளைஞர் அணிச் செயலாளர்ஸ்டாலின் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர். அடிமட்ட அளவிலிருந்து கட்சியின் முன்னணிப் பதவிகளுக்குவந்தவர்.
தனிப்பட்ட வாழ்க்கையில் தா.கிருட்டிணனுக்கு எதிரிகள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. சொத்துப்பிரச்சினை உள்பட எந்த விதப் பிரச்சினையும் இல்லாமல் அவர் இருந்து வந்துள்ளார். சொந்த ஊரிலும் நல்லசெல்வாக்கும், பெயரும் உள்ளவர்.
மிகவும் நிதானப்போக்கைக் கடைப்பிடிக்கக் கூடிய தா.கிருட்டிணன் கொலை செய்யப்பட்டுள்ளது அவரது சொந்தமாவட்டமான சிவகங்கையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலைக்கு திமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசலே காரணமாக இருக்க வேண்டும் என போலீசார்கூறுகின்றனர். ஆனால், இதை திமுக மறுத்துள்ளது. சொந்த ஊரில் இருந்த முன் விரோதம் காரணமாகவேத.கிருட்டிணன் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என திமுகவினர் கூறுகின்றனர். ஆனால், உட்கட்சிப் பூசல் தான்முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
வேலுச்சாமி திண் காவேரிமணியம்:
மதுரை மாநகர திமுக செயலாளர் பதவிக்கு யாரை நிறுத்துவது என்பதில் பூசல் எழுந்துள்ள நிலையில்,தா.கிருட்டிணன், முன்னாள் மதுரை கிழக்கு எம்.எல்.ஏ. வேலுச்சாமிக்கு ஆதரவாக இருந்துள்ளார். இவர் ஸ்டாலின்ஆதரவாளர்.
ஆனால் அழகிரி தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏவும், தற்போதைய தலைவருமான காவேரிமணியத்திற்கு ஆதரவுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீண்ட விவாதம், வாதப் பிரதிவாதங்களும் எழுந்துள்ளன. கடைசியில் இரண்டு நாட்களுக்கு முன்திமுக தலைவர் கருணாநிதி இப்பிரச்சினையில் தலையிட்டுள்ளார். நான் சொல்லும் நபரையே பேசாமல்தேர்ந்தெடுங்கள், இதற்கு மேலும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாதுஎன்று மிகவும் கோபத்துடன் கருணாநிதி கூறியதாகத் தெரிகிறது.
இந் நிலையில் நேற்று நள்ளிரவு வரை தா.கிருட்டிணன், காவேரி மணியம், முன்னாள் மேயர் குழந்தைவேலு,வேலுச்சாமி ஆகியோர் மற்றும் பிற நிர்வாகிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் உடன்பாடுஏற்படவில்லை.
சண்டை தான் மூண்டது. இதையடுத்து தா.கிருட்டிணன் வீட்டுக்குக் கிளம்பி விட்டார். இந் நிலையில் இன்று காலைஅவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திமுக உட்கட்சி மோதலே இந்த கொலைக்குப் பின்னணியில் இருக்கலாம் என்று கூறப்படுவதால், சில முக்கிய திமுகபுள்ளிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகத் தெகிறது. இதை வைத்து அழகிரியை உள்ளே தள்ளவும்முயற்சி நடக்கும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் சிக்னலுக்காக காத்துக் கொண்டுள்ளது மதுரைபோலீஸ்.
அமெரிக்காவில் இருந்து ஸ்டாலின் விரைவு:
கிருட்டிணனை எம்.பியாக்கியதிலும் அமைச்சராக்கியதிலும் பெரும் பங்கு வகித்தவர் ஸ்டாலின். இதனால்அவருக்கு கிருட்டிணன் மிக விசுவாசமாக இருந்தார்.
இப்போது அமெரிக்காவில் இருக்கும் ஸ்டாலின், கொலைச் செய்தியைக் கேட்டவுடன் உடனடியாக தனதுபயணத்தைப் பாதியில் முடித்துக் கொண்டு இன்றே சிகாகோவில் இருந்து மதுரை திரும்புகிறார். மதுரையில் தனதுஆதரவாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.
இதையடுத்து அழகிரி- ஸ்டாலின் தரப்பினரிடையே மோதல் மேலும் வலுக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தலைமை மீது கோபம்:
த.கிருட்டிணனின் வீட்டில் குவிந்த அவரது ஆதரவாளர்கள் இந்தக் கொலைக்கு திமுக தலைமையையே குற்றம்சாட்டினர். அழகிரியையும் அவரது ஆட்களின் அடாவடியையும் தடுக்க தலைமை தவறியதால் தான் இந்தக்கொலை நடந்துள்ளது. நிச்சயம் இதற்குப் பழிக்குப் பழி வாங்குவோம் என வெளிப்படையாகவே மிரட்டல்விடுத்தனர்.
பல இடங்களில் இந்தக் கொலைக்கு பழி வாங்குவோம் என்று அறிவிக்கும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.
நாளை நடக்கவுள்ள த.கிருட்டிணனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்குமாறு திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர்அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமிக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
மூத்த திமுக தலைவர்களான துரைமுருகன், பொன்முடி ஆகியோர் இன்றே மதுரை விரைந்துள்ளனர். இவர்கள்அழகிரி- ஸ்டாலின் ஆதரவாளர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே நிருபர்களிடம் பேசிய மதுரை கமிஷ்னர் கந்தசாமி, குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம்.இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications