திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமனும் கைது?
திருப்பத்தூர்:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் திமுக எம்.எல்.ஏ.சிவராமனும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சிவராமன். இவரை சிவகங்கை மாவட்டச் செயலாளராக்கஅழகிரி முயன்று வந்தார்.
ஆனால், ஸ்டாலின் தனது ஆதரவாளரான தா.கிருட்டிணனை இந்தப் பதவியில் அமர வைத்தார்.
இப்போது நடந்து வரும் திமுக உட்கட்சித் தேர்தலில் கிருட்டிணனிடம் இருந்து இந்தப் பதவியைப் பறித்து தனதுஆதரவாளரான சிவராமனுக்குத் தர அழகிரி முயன்று வந்தார். ஆனால், கிருட்டிணனுக்கு மாவட்ட மற்றும் ஒன்றியஅளவிலான தொண்டர்களின் ஆதரவு இருந்தது.
இதனால் தேர்தல் வைப்போம். யார் ஜெயிக்கிறோம் என்று பார்ப்போம் என சவால் விட்டது ஸ்டாலின்-கிருட்டிணன் தரப்பு. ஆனால், தேர்தல் வைத்தால் தங்களுக்கு பதவி கிடைக்காது என்பதால் தேர்தலே நடத்தாமல்ஒருமனதாக சிவராமனை மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என கருணாநிதியை நச்சரித்து வந்தார் அழகிரி.
இதற்கு கிருட்டிணனும் ஸ்டாலினும் ஒத்துக் கொள்ளவில்லை. இதில் இனி நான் தலையிட மாட்டேன். தேர்தல்நடத்தி தொண்டர்கள் யாரைத் தேர்வு செய்தாலும் சரி என்று கூறிவிட்டு கருணாநிதி ஒதுங்கிக் கொண்ட நிலையில்தான் கிருட்டிணன் கொல்லப்பட்டார்.
கிருட்டிணனின் பதவியைக் குறி வைத்தவர் என்ற அடிப்படையில் திருப்பதூர் சிவராமன் கைது செய்யப்படலாம்என்று தெரிகிறது. இன்று காலை மதுரையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் சிவராமனின் வீட்டில் காத்துக்கொண்டுள்ளது. அவர் வீட்டில் இல்லாததால் போலீசார் காத்துக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே தா.கிருட்டிணன் கொலை வழக்கில் துப்பு துலக்குவதற்காக 6 தனிப்படைகள்அமைக்கப்பட்டுள்ளதாகவும் மதுரை போலீஸ் கமிஷ்னர் கந்தசாமி தெரிவித்தார்.
அழகிரியை ஆதரிக்கும் அதிமுக:
ஒரு பக்கம் திமுகவின் உட்கட்சிப் பூசலால் மகிழ்ச்சியில் உள்ள அதிமுக இன்னொரு பக்கம் அழகிரியைப் பகைத்துக் கொள்ளத்தயாராக இல்லை. இதனால் தான் இவரது மதுரை அடாவடிகளைக் கூட அதிமுக அரசு கண்டுகொண்டதும் இல்லை.
எதிர்காலத்தில் தங்களுக்கு பெரும் சவாலாக இருக்கப் போவது ஸ்டாலின் தான் என்று கருதும் அதிமுக தலைமை அவருக்கு செக்வைக்க அழகிரியைத் தான் ரொம்பவே நம்பியுள்ளது. அழகிரியை வைத்து திமுகவின் கண்ணில்விரலை வைத்து ஆட்ட முடியும் என அதிமுக நினைக்கிறது.
இப்போது அழகிரியிடம் புழங்கும் ஏகப்பட்ட கோடிகள் கூட ஆளும் தரப்பில் இருந்துஇறக்கிவிடப்படுபவை தான் என்று கூறப்படுகிறது. இப்போதையை அவரது கைது கூட திமுகவின்மீது கறை படிய வைக்கவே தானே தவிர அழகிரியை நிச்சயம் பழிவாங்க மாட்டார்கள் என்கின்றனர்விவரம் அறிந்தவர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications