இது பட்டுச் சேலை தான்!
சென்னை:
பட்டுச் சேலைகள் என்று கூறி தரம் குறைவான போலி பட்டுச் சேலைகளை விற்று ரூ. 60 லட்சம் வரை மோசடிசெய்த வட இந்தியக் கும்பல் பிடிபட்டுள்ளது. அவர்களிடம் இருந்து தரம் குறைந்த 40,000 சேலைகளும் பறிமுதல்செய்யப்பட்டன.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கல்யாண மண்டபங்கள், கலையரங்கங்கள் போன்றவற்றில் எப்போதும், ஏதாவதுஒரு சேலைக் கண்காட்சி நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். 40 முதல் 90 சதவீத தள்ளுபடியில் பட்டுச் சேலைகள் என்றுமைக்செட், போஸ்டர்கள், பிட் நோட்டீஸ் மூலம் விளம்பரம் செய்து இந்த வியாபாரம் நடக்கும்.
இந்த மெகா சேல்ஸ் நடத்துவோர் பெரும்பாலும் மார்வாடிகள் அல்லது வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான்.
இதுபோலவே குஜராத்தைச் சேர்ந்த இந்துஸ்தான் சில்க் டிரேடிங் என்ற நிறுவனத்தின் சார்பில், சென்னை மற்றும்கோவையில் பட்டுச் சேலைக் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்தது. லேசான குறைபாடுகள் உள்ள தரம் வாய்ந்தபட்டுச் சேலைகள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டதால், பெண்கள் கூட்டம் அங்குமொய்க்க ஆரம்பித்தது.
சென்னை பெரியார் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலின் அரங்கத்தில் இந்தக் கண்காட்சி, விற்பனைநடந்தது.
ரூ. 1000 மதிப்புள்ள சேலை வெறும் ரூ. 100க்கே தரப்படுவதாகவும், ரூ. 10,000 விலை மதிப்புள்ள சேலை வெறும்ரூ. 500க்கு என்றும் கூறப்பட்டதால் பெண்கள் அதை போட்டி போட்டு வாங்கினர்.
வாங்கி அதை ஒரு முறை கட்டி தண்ணீரில் நனைத்த பிறகு தான் அவை மிகச் சாதாரண நூல் சேலைகள் என்றுதெரியவந்தது.
சுதாரித்துக் கொண்ட சில பெண்கள் மீண்டும் அந்த கண்காட்சிக்குச் சென்று சண்டையிட்டனர். ஆனால்,மழுப்பலான பதில் தந்துவிட்டு அவர்கள் தப்பிவிட்டனர். தொடர்ந்து பல பெண்களிடம் இருந்து புகார்கள்வந்ததால் இந்தக் கும்பல் இடத்தை மாற்றியது.
எழும்பூர் எத்திராஜ் கல்லூரி அருகே ஒரு கல்யாண மண்டபத்தைப் பிடித்து அங்கு தங்களது சேல்ஸைத்தொடங்கினர். அங்கேயும் இதே கதைதான்.
ஆட்டோ டிரைவர் ஒருவர் வாங்கிய ரூ. 400 மதிப்புள்ள சேலை 40 ரூபாய் கூட பெறாது என்று அவர் மனைவிதூக்கி எறிந்ததால், அந்த சேலையை வைத்துக் கொண்டு பணத்தைத் தருமாறு ஆட்டோ டிரைவர் கூறியுள்ளார்.ஆனால் அதை ஏற்க வியாபாரிகள் மறுத்துள்ளனர்.
இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தியபோது தான்அத்தனை சேலைகளும் தரம் குறைந்தவை என்றும் பட்டுச் சேலைகளே அல்ல என்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அனைத்து சேலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சேலைகளை விற்ற குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த பிராடுகளான ஹரி ஜெயின், அபீஸ் ஜெயின், அனீஸ், ஹபீப், ராஜேஷ் ஆகிய பேரையும் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 40,000 தரமற்ற சேலைகளும் பறிமுதல் செய்ய்பட்டன.
அவர்களிடம் நடத்திய விசாரணையின்போது தமிழகத்தில் மட்டும் இதுபோல மோசடியாக விற்பனை செய்து ரூ.60 லட்சம் வரை சம்பாதித்துள்ளது தெரியவந்தது.
இப்போது இக் கும்பல் கம்பி எண்ணிக் கொண்டுள்ளது. இக் கும்பலின் தலைவனான வியாபாரியைப் பிடிக்கதனிப் படை போலீசார் குஜராத் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications