வீரப்பனின் நெருங்கிய கூட்டாளி குட்டி வீரப்பன் பிடிபட்டான்
சேலம்:
வீரப்பனின் மிக நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவனான குட்டி வீரப்பன் பிடிபட்டுள்ளான். ஏற்காடு மலைப்பகுதியில் அவனை தமிழக போலீசார் கைது செய்தனர். இவனிடமிருந்து துப்பாக்கிகளும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
கடந்த 20 ஆண்டுகளாக இவன் வீரப்பன் கும்பலில் உள்ளான். இவன் மீது பல கொலை, யானைகள் கொலை,தந்தம் கடத்தல், சந்தன மரம் கடத்தல் வழக்குகள் உள்ளன.
பசவன், பேபி வீரப்பன், வனராஜா உள்பட பல்வேறு பெயர்களைக் கொண்ட இவன் குட்டி வீரப்பன் என்றஅடைமொழியில் தான் வெளியுலகுக்கு அதிகம் தெரியவந்துள்ளான். வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ளகூட்டு அதிரடிப்படை இவனையும் தான் முக்கியமாகத் தேடி வந்தது.
சமீபத்தில் வீரப்பன் குறித்து தகவல் தரக் கோரி சேலம், ஈரோடு மாவட்டங்கள் முழுவதும் அதிரடிப்படையினர்ஒட்டிய போஸ்டர்களில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இவனது படம் தான்இருந்தது.
சேலம் மாவட்ட போலீசார் தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின்படி நடத்திய அதிரடி சோதனையில் ஏற்காடுமலைப் பகுதி கிராமம் ஒன்றில் பதுங்கி இருந்த குட்டி வீரப்பன் கைது செய்யப்பட்டுள்ளான்.
வசவம்பட்டி என்ற இடத்தில் இவனும் இன்னொருவனும் பிடிபட்டதாக சேலம் மாவட்ட எஸ்.பி.பொன்.மாணிக்கவேல் கூறினார்.
குட்டி வீரப்பனிடம் இருந்து இருந்து நாட்டுத் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. இவன் பிடிபட்டவுடன் அந்தத்தகவல் அதிரடிப்படைக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிரடிப்படை அதிகாரிகள் விரைந்து வந்துஅவனை தங்கள் கஸ்டடியில் கொண்டு சென்றனர்.
மிக பலத்த பாதுகாப்புடன் அவன் அதிரடிப்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டான். இப்போது அவனிடம்அதிரடிப்படை விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்காடு மலைப் பகுதியில் திடீரென மரங்கள் கள்ளத்தனமாக வெட்டப்பட்டது அதிகரித்தது. இதையடுத்துசந்தேகமடைந்த எஸ்.பி. பொன்.மாணிக்கவேல் இப் பகுதியில் உளவுப் பிரிவினரின் நடமாட்டத்தை அதிகரித்தார்.அப்போது தான் அப் பகுதியில் குட்டி வீரப்பன் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த சில நாட்களாக நடந்த ரகசிய வேட்டையில் இவன் பிடிபட்டுள்ளான்.
வீரப்பனை அதிரடிப்படை தொடர்ந்து விரட்டி வருவதால் அவன் தனது கூட்டத்தை சிறு சிறு குழுக்களாகப்பிரித்துவிட்டதாகத் தெரிகிறது. குட்டி வீரப்பனும் சிலரும் வீரப்பனிடம் இருந்து தனியே பிரிந்து செயல்பட்டுவந்தனர். ஆனாலும் அவனுக்கு வீரப்பனின் பதுங்குமிடங்கள் குறித்து அனைத்து விவரங்களும் தெரியும் என்றுகூறப்படுகிறது.
1980, 90ம் ஆண்டுகளில் இவன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 முறை கைதாகியுள்ள குட்டி வீரப்பன்கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளான். 2002ம் ஆண்டில் கூட இவன் ஒருமுறை கைதானான்.ஆனால், மீண்டும் விடுதலையாகி வீரப்பன் கும்பலில் ஐக்கியமானான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications