For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலில் "திணிப்பு" இல்லை: கருணாநிதி பாய்ச்சல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக உட்கட்சித் தேர்தலின்போது யாரையும் போட்டியிட வேண்டாம் என்று கட்டாயப்படுத்தவும் இல்லை,யாரையும் பதவிகளுக்கு திணிக்கவும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக உட்கட்சித் தேர்தலில் பலத்த போட்டியும் இதனால் அடிதடியும், வெட்டு குத்தும், ஆள் கடத்தல்களும் நடந்துவருவதால் கருணாநிதியே தலையிட்டு பல பதவிகளுக்கு ஆட்களை அறிவிப்பதாகவும், மேலிடம் கூறும்நபர்கள்தான் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதை கருணாநிதி மறுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் வட்டச் செயலாளர் முதல் மாவட்ட அமைப்புகள் வரை தேர்தலின்மூலம் மட்டுமே பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ள சில பகுதிகளில் மட்டும், அப்பகுதியினர் வேண்டுகோளின்படி ஒருமனதான வேட்பாளர் தேர்வுசெய்யப்படுகிறார்.

தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று யாரையும் தடுக்கவும் இல்லை, போட்டியிடுமாறு யாரையும்வற்புறுத்தவும் இல்லை. நீலகிரி போன்ற மாவட்டங்களில் போட்டியின்றித் தேர்தல் நடந்துள்ளது. தேனி,விருதுநகர், தர்மபுரி போன்ற பகுதிகளில் போட்டி தவிர்க்க முடியாததாக உள்ளது.

நான் பிறந்த திருவாரூரை உள்ளடக்கிய நாகப்பட்டிணத்தில் கூட 3 பேர் மாவட்ட செயலாளர் பதவிக்குப்போட்டியிடுகிறார்கள். அதைக் கூட நான் தடுக்கவில்லை. மற்ற இடங்களிலா தடுக்கப் போகிறேன்?

எனவே கட்சி மேலிடம்தான் வேட்பாளர்களைத் திணிப்பதாக விஷமத்தனமாக சில ஏடுகள் செய்தி வெளியிடுவதுகண்டனத்துக்குரியது என்று அவர் கூறியுள்ளார்.

கருப்பசாமி பாண்டியன் விலகல்:

இதற்கிடையே திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து கருப்பசாமி பாண்டியன் விலகிக்கொண்டுள்ளார். மதுரையைப் போலவே இந்த மாவட்டத்திலும் தலைமைப் பதவியைப் பிடிக்க கடும் கோஷ்டிமோதல் நடந்து வருகிறது.

ஸ்டாலின் ஆதரவாளரான கருப்பசாமி பாண்டியனை எதிர்த்து அழகிரி ஆதரவாளரான ஆவுடையப்பன் களத்தில்இறங்கியுள்ளார்.

கருப்பசாமி பாண்டியனுக்கு ஆள், பண பலம், அடியாள் பலம் ஜாஸ்தி. இதனால் இவரது வெற்றி உறுதி என்றுதெரிந்துள்ள நிலையில் அவரே போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.

திமுக தலைவர் கருணாநிதியின் அறிவுறுத்தலின்பேரில் அவர் விலகிவிட்டதாகத் தெரிகிறது. அதிமுகவில் இருந்துதிமுகவுக்கு வந்தவர் கருப்பசாமி பாண்டியன் நெல்லை பகுதியில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவர்.

விரைவில் மதுரை திமுக தேர்தல்:

இதற்கிடையே தா.கிருட்டிணனின் மறைவினால் ஒத்தி வைக்கப்பட்ட மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகியமாவட்டங்களின் 12-வது கட்சித் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடத்தி முடிக்க திமுக மேலிடம் முடிவு செய்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்தல்களை நடத்திக் காட்டுவதன் மூலம் மதுரை திமுகவில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்றஇமேஜை உருவாக்க முடியும் எனவும் கருணாநிதி நினைக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X