சுய மரியாதை திருமணங்களே சிறந்தவை: கருணாநிதி
சென்னை:
புரோகிதர்கள் வைத்து திருமணம் செய்வதை விட பெரியார் வழியில், சுய மரியாதைத்திருமணங்கள் செய்வதை அதிக அளவில் தமிழக மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று திமுகதலைவர் கருணாநிதி கூறினார்.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மகளுக்கு சென்னையில் திருமணம் நடந்தது. அண்ணாஅறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்த இந்தத் திருமணத்தை நடத்தி வைத்துப் பேசியகருணாநிதி,
நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து செய்யப்படும் திருமணங்கள் அனைத்தும் வெற்றிகரமாகஇருப்பதில்லை. இவையெல்லாமல் பார்க்காமல் செய்யப்படும் சுயமரியாதைத் திருமணங்கள்தோல்வி அடைந்ததும் இல்லை.
ராமனுக்கும், சீதைக்கும் நல்ல நாள் பார்த்து, வசிஷ்டர் குறித்துக் கொடுத்த நாளில்தான் திருமணம்நடந்தது. தேவர்களும், முனிவர்களும் வந்திருந்து வாழ்த்தினர். ஆனால் என்ன நடந்தது? வனவாசம்மேற்கொள்ள வேண்டியதாயிற்றே? அந்தக் கண்டத்திலிருந்து அவர்களால் தப்ப முடியவில்லையே.
எனவே, புதுமணத் தம்பதிகளுக்கு பஞ்சாங்கமோ, லக்கணமோ, நல்ல நாளோ, நட்சத்திரமோசுபிட்சத்தைக்கொடுப்பதில்லை. பெரியாரும், அண்ணாவும் கூறிய புரட்சிகர சிந்தனைகளும்,செயல்களுமே அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
அண்ணா முதல்வராக இருந்தபோது சுயமரியாதைத் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கினார்.இதுபோன்ற திருமணங்களை செய்வோருக்கு எந்தவித இடர்பாடு ஏற்பட்டு விடக் கூடாதுஎன்பதற்காக அதை சட்டப்பூர்வமாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார் கருணாநிதி.


