காஷ்மீர் தீவிரவாதிகளின் சென்னை தொடர்புகள்: ஐ.பி விசாரணை
சென்னை:
காஷ்மீர் தீவிரவாதிககளுக்கு சென்னையில் சில நபர்களுடன் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஜம்மூ- காஷ்மீரின் காட்டுப் பகுதிகளில் சோதனை நடத்தி வரும் ராணுவப் படையினர் இதனைத்தெரிவித்துள்ளனர். காட்டுப் பகுதிகளில் தீவிரவாதிகளின் முகாம்களை ராணுவ வீரர்கள் கைப்பற்றியபோது சிலசாட்டிலைட் போன்களும் பிடிபட்டன.
அவற்றை ராணுவ வீரர்கள் சோதனையிட்டபோது அந்த சாட்டிலைட் போன்களில் இருந்து சென்னைக்கும் பலமுறைபேசப்பட்டுள்ள விவரம் தெரியவந்தது. இதையடுத்து ராணுவ உளவுப் பிரிவினர் மத்திய உளவுப் பிரிவினருக்கு(இன்டெலிஜன்ல் பீரோ- ஐபி) தகவல் தந்தனர்.
தீவிரவாதிகள் தொடர்பு கொண்ட அந்த சென்னை தொலைபேசி நம்பர்களைக் கண்டறியும் முயற்சியிஸ் இப்போதுமத்திய உளவுப் பிரிவினர் மாநில உளவுப் பிரிவினரும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
காஷமீரின் சுரான்கோட் பகுதியில் தேர் பீர் பஞ்சால் காட்டுப் பகுதியில் ராணுவத்தினர் அதிரடி ஆபரேசன்நடத்தியபோது இந்த சாட்டிலைட் போன்கள் பிடிபட்டன. சென்னை தவிர வட கிழக்கு மாநிலங்கள், ஹைதராபாத்,பாட்னா, ராஞ்சி ஆகிய இடங்களுக்கும் இதன் மூலம் தீவிரவாதிகள் பேசியுள்ளனர்.
இதையடுத்து அந்த மாநில போலீசாரையும் ராணுவம் தொடர்பு கொண்டுள்ளது.
ஆனால், சென்னையில் யாரையும் தீவிரவாதிகள் தொடர்பு கொள்ளவில்லை என காவலதுறை ஆணையர்விஜய்குமார் மறுத்துள்ளார். இது தொடர்பாக காஷ்மீரில் உள்ள ராணுவ உளவுப் பிரிவினருடன் பேசிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், சென்னையில் இது தொடர்பான விசாரணை நடந்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications