முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் திடீர் சரண்
சென்னை::
திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியானஇப்ராகிம் சுலைமான் சேட் இன்று சென்னை நீதிமன்றத்தில் திடீரென சரணடைந்தார்.
இந்தக் கொலை வழக்கில் ஏற்கனவே மூன்று குற்றவாளிகளை மதுரை போலீசார் கைது செய்துவிட்டனர். அவர்கள்இன்றோ நாளையோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
4வது குற்றவாளியான இப்ராகிம் சுலைமான் சேட்டை போலீசார் தேடி வந்தனர். அவர் திருநெல்வேலியில் ஒருமுக்கிய புள்ளியின் உதவியோடு தலைமறைவாக இருப்பதாகக் கருத்பட்டது.
இதையடுத்து நெல்லைக்கு தனிப் போலீஸ் படைகள் அனுப்பப்பட்டன. ஆனால், அவர் பிடிபடவில்லை. அவரை 6போலீஸ் தனிப் படைகள் தேடி வந்தன.
இந் நிலையில் அவர் இன்று காலை திடீரென சென்னை எழும்பூர் 13வது பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட்நீதிமன்றத்தில் சரணடைந்தார். மோகன கிருஷ்ணன் என்ற வழக்கறிஞருடன் அவர் திடீரென நீதிமன்றத்துக்கு வந்துசரணடைவதாக அறிவித்தார்.
இதையடுத்து இப்ராகிமை சென்னை மத்திய சிறையில் காவலில் வைக்க நீதிபதி வெங்கட வரதன் உத்தரவிட்டார்.
2ம் தேதி அவரை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த இப்ராகிம் சுலைமான் சேட், மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரான மதுரை ஆவின்பால்பண்ணையின் முன்னாள் தலைவர் மன்னனின் அடியாள் என்பது குறிப்பிடத்தக்கது.அழகிரியின் பரிந்துரையால் தான் ஆவின் தலைவர் பதவியே மன்னனுக்குக் கிடைத்தது.
இப்ராகிம் சுலைமான் சேட் சரணடைந்திருப்பதால், தா.கி. படுகொலையில் முக்கியத் திருப்பம்ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று கொலையாளிகள் பிடிபட்டுவிட்ட நிலையில் 4வது நபரும்பிடிபட்டுவிட்டார்.
மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 3 கொலையாளிகளும் ன்று அல்லதுநாளை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சரணடைந்த இப்ராகிம் மதுரை கணபதிபுரத்தைச் சேர்ந்தவர். இந்தக் கொலை தொடர்பாக அவர்இன்று காலை நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலமும் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications