செஞ்சி ராமச்சந்திரன் குற்றமற்றவர்: வைகோ
சென்னை:
செஞ்சி ராமச்சந்திரன் எந்தத் தவறும் செய்யவில்லை என மதிமுக தலைவர் வைகோ கூறினார்.
தனது உதவியாளர் மீதான ஊழல் புகார் காரணமாக சில நாட்களுக்கு முன் மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்பதவியில் இருந்து செஞ்சி ராமச்சந்திரன் பதவி விலக நேர்ந்தது. இந் நிலையில் இன்று காவல் நீட்டிப்புக்காகவைகோ பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரது வைகோவின் காவலை வரும் ஜூன் 10ம் தேதி வரை நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதன் பின்னர் மீண்டும் வேலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக வெளியே கொண்டு வரப்பட்டவைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
எனக்கு செஞ்சி ராமச்சந்திரனின் மீது நம்பிக்கை உள்ளது. அவர் தவறு செய்திருக்க மாட்டார். நாங்கள்குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம். நேற்று வேலூர் சிறைக்கு செஞ்சியார் வந்தார். நிதித்துறை அதிகாரிகள்மாற்றம் குறித்து விதிமுறைகளை என்னிடம் காட்டினார்.
அதன்படி அனுராக் வர்தனை (இவரிடம் ரூ. 4 லட்சம் லஞ்சம் வாங்கியபோது தான் செஞ்சியின் உதவியாளர்பெருமாள்சாமி மாட்டினார்) இடமாற்றம் செய்யும் அதிகாரம் செசி ராமச்சந்திரனுக்கு இல்லை.
கேபினட் அமைச்சரால் மட்டுமே அது போன்ற உயர் அதிகாரியை மாற்றம் செய்ய முடியும். அதிகாரி இடமாற்றம்செய்யப்பட்டால் அது தொடர்பாக இணையமைச்சருக்கு ஒரு மரியாதைக்காக செய்தி தான் தரப்படும்.
ஜனநாயக மரபுகளைக் கட்டிக் காக்கவே செஞ்சியார் ராஜினாமா செய்தார். யாருடைய நெருக்குதலுக்கும் அவர்பணியவில்லை. மக்களுக்காக உழைத்தவர் செஞசி ராமச்சந்திரன். அவரது பதவி விலகலால் தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கும் மதிமுகவுக்கும் உள்ள உறவு பாதிக்கப்படாது.
மதிமுக சார்பில் மத்திய அமைச்சரவையில் இன்னொருவருக்கு இடம் கேட்கவும் மாட்டோம் என்றார் வைகோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications