பேச்சு தோற்றால் வரலாற்றில் பின்தங்கிவிடுவோம்: ரணில்
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறாவிட்டால் வரலாற்றுரீதியில் இலங்கை பெரும்பின்னடைவை சந்திக்கும் என அந் நாட்டுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரித்துள்ளார்.
ஆசிய லிபரல்ஸ் மற்றும் ஜனநாயகவாதிகள் கவுன்சில் கூட்டத்தில் ரணில் பேசியதாவது:
அமைதிப் பேச்சுவார்த்தைகளில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதால் புலிகளின் கோபம் எனக்குப்புரிகிறது. ஆனால், அரசின் நிலையையும் புலிகள் புரிந்து கொள்ள வேண்டும். அமைதிப் பேச்சுவார்த்தைக்குசர்வதேச அளவிலும் தேசிய அளவில் பெரும் ஆதரவு கிடைத்தது.
ஆனால், இப்போது அந்த ஆதரவு குறைந்து வருகிறது. இது நமக்கு கிடைத்த எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
இந்த முறை பேச்சுவார்த்தைகளில் நாம் தோற்றால் நாடும் மக்களும் வரலாற்றின் பழைய பக்கங்களுக்குத்தள்ளப்படுவோம். 40, 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடுவோம். நம் மக்கள் பசியிலும் பட்டினியிலும்கிடப்பார்கள். நம் தொழில்கள் நசுங்கும். உலகச் சந்தையில் போட்டியிட முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம்.போரினால் மேலும் பலரை இழப்போம்.
பேச்சுவார்த்தைகளில் ஒப்புக் கொண்ட விஷயங்களை அரசு நிறைவேற்றாதது உண்மை தான். ஆனால், தங்களதுஎதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அரசுக்கு உள்ள இடைஞ்சல்களை புலிகள் மேலும் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்பது தான் என் ஆசை. இதில் பெரும்பாலானவை நிர்வாகரீதியிலான சிக்கல்களால் தான்தாமதமடைந்து வருகின்றன.
பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தடை கூட ஒரு பக்கம் நல்லதுக்காகத் தான் என்று நினைக்கிறேன். இருதரப்பினருக்குமே நிலைமையை நன்றாக ஆராய அவகாசம் கிடைத்தது. இப்போது புத்துணர்வுடன் மீண்டும்பேச்சுவார்த்தைக்குச் செல்ல முடியும் என்றார் ரணில்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications