குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்ட சட்டக் கல்லூரி மாணவர்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்து வந்த 44 வயது மாணவர், குண்டர் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு படித்து வருபவர் பாஸ்கர். திருச்சியைச் சேர்ந்த இவர்பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவராவார்.
ஆனால், இந்தத் தண்டனைகளில் இருந்து தப்ப தன்னை வக்கீலாகக் காட்டிக் கொள்ள சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். அதே நேரத்தில் தனது கொள்ளை, ஆள் கடத்தல் வேலைகளைத் தொடர்ந்துசெய்துவந்தார்.
இதையடுத்து இந்த ரெளடியை திருச்சி போலீசார் மடக்கினர். மாவட்டக் கலெக்டரின் உத்தரவுப்படி இவர்மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளே தள்ளியுள்ளனர்.
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளே போனால் ஒரு வருடத்துக்கு ஜாமீன் கூட கிடைக்காதுஎன்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications