போலீஸ் கோரிக்கை நிராகரிப்பு: அழகிரி மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு
மதுரை:
அழகிரியை மேலும் சில நாட்கள் தங்களிடம் விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றபோலீசாரின் கோரிக்கையை மதுரை நீதிமன்றம் நிராககித்தது. இதையடுத்து 2 நாள் போலீஸ்விசாரணை முடிந்த நிலையில் வர் மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது, அழகிரியை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க அனுமதிக்குமாறு கோரி போலீஸ்தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு அழகிரியின் வக்கீல் மோகன் குமார் எதிர்ப்பு தெரிவித்தார். 2 நாட்களாக நடந்தவிசாரணையின்போது 300க்கும் மேற்பட்ட கேள்விகளை போலீஸார் கேட்டனர். இவற்றிற்குரியபதில்களை அழகிரி தெரிவித்து விட்டார். ஆனால் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியானகேள்விகளையே மாற்றி மாற்றி போலீஸார் கேட்கிறார்கள்.
எனவே மறுபடியும் அழகிரியை போலீஸ் காவலில் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றார்.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி வனிதா, போலீஸ் காவலில் அழகிரியை அனுப்ப மறுத்து விட்டார்.
அதே நேரத்தில் அவரது நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அழகிரிமீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, அழகிரியிடம் நடத்தப்படும் விசாரணையின்போது, அவரது வக்கீல் உடன் இருக்கஅனுமதிக்கக் கூடாது என்று கோரி மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீஸார் மனுசெய்திருந்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவப்பிரகாசம், போலீஸாரின் கோரிக்கையை ஏற்றார். ஆனால்அந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோதே அழகிரியின் போலீஸ் காவலுக்கான நேரம் முடிந்துவிட்டது.இதையடுத்து அவர் 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த இரு நாட்களாக அழகிரியிடம் நடத்திய விசாரணையில் அவரை தா.கிருட்டிணன்கொலையுடன் தொடர்புப்படுத்த போலீசாருக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
திமுக வக்கீல் மீது அரசு வக்கீல் புகார்:
அழகிரி வழக்கு தொடர்பான நீதிமன்ற விவாதத்தின்போது தன்னை அசிங்கமாகத் திட்டியதாகவும்,கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் திமுக வக்கீல்கள் மீது அரசு உதவி வக்கீல் ரஜினி புகார்கொடுத்துள்ளார்.
அழகிரியின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை 3.30மணியளவில் அவர் மதுரை 6-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வனிதா முன்னிலையில்ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அரசு உதவி வக்கீல் ரஜினிக்கும், திமுக வக்கீல்கள் மோகன்குமார், கோபி, பழனிச்சாமி,சாமுவேல் ராஜ், சின்னராஜ் மற்றும் செந்தில் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் பின்னர் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமாரைச் சந்தித்த வக்கீல் ரஜினி ஒருபுகார் கொடுத்தார்.
அதில், 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில், திமுக வக்கீல்கள் என்னை தாறுமாறாகத்திட்டியதுடன், என்னுடன் இருந்த வக்கீல்களையும் தரக்குறைவாக திட்டினர்.
மேலும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் விஜயக்குமார் உறுதியளித்துள்ளார்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications