மலேசிய: இந்தியர்களை ஏமாற்றும் இந்திய ஏஜெண்டுகள்
கோலாலம்பூர்:
மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக இந்தியர்களை, இந்தியர்கள் தான் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகமலேசிய நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த வழக்கு விசாரணை கோலாலம்பூரில் உள்ள மலேசிய உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கு விசாரணையின்போது நீதிபதி ஆர்.கே. நாதன் கூறுகையில், இந்தியாவில் உள்ள ஏஜெண்டுகள் தான்மலேசியாவில் இந்தியர்களுக்கு வேலை வாங்கித் தருவதில் தொடர்ந்து மோசடி செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். 52 ஊழியர்கள் சார்பாக இங்கே வழக்கை நடத்தும் வழக்கறிஞர் இதை இந்தியாவிடம் தெரிவிக்கவேண்டும்.
இந்தியாவில் இருந்து நல்ல வேலை என்று நம்பி இந்த 52 பேரும் மலேசியா வந்துள்ளனர். ஆனால், அவர்களிடம்வேலையின் தன்மை குறித்து இந்திய ஏஜெண்டுகள் பொய்யான தகவல்களைத் தந்துள்ளனர் என்றார்.
முன்னதாக இந்த 52 தொழிலாளர்களும் சின் வெல் பாஸ்ட்னர்ஸ் நிர்வாகத்தை எதிர்த்து கடந்த ஆண்டு வழக்குத்தொடர்ந்தனர். தங்களுக்கு ஒப்புக் கொள்ளப்பட்ட குறைந்த பட்ச ஊதியத்தைக் கூட (ரூ. 7,200) இந்த நிறுவனம்தரவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கில் மலேசியாவில் உள்ள இந்திய ஏஜெண்டான அமர்ஜீத் சிங் என்பவரும் சாட்சியாகசேர்க்கப்பட்டுள்ளார். இவர் நீதிமன்றத்தில் பல பொய்யான தகவல்களைத் தந்துள்ளதாக நீதிபதி நாதன் அவரைமிகக் கடுமையாகச் சாடினார்.இந்தியரான இவர் தான் இந்தியர்களிடம் பொய்யான உறுதிமொழிகள் தந்து மலேசியாவுக்கு அழைத்துவந்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார். இதை இந்திய அரசிடம் உடனே தெரிவிக்குமாறும் உத்தரவிட்டார்.இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த அமர்ஜீத் சிங், நான் இந்தியாவில் இருந்து யாரையும்மலேசியாவுக்கு வேலைக்கு அழைத்து வரவில்லை என்று கூறினார். ஆனால், முன்பு சாட்சியளிக்கையில் இந்தியா,நேபாள், பங்களதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து ஆட்களை அழைத்து வந்ததாகக் கூறினார்.இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாக நீதிமன்றத்தில் சாட்சியளித்த சிங்கை நீதிபதி நாதன் கடுமையாகக் கண்டித்தார்.












Click it and Unblock the Notifications