ஜெயலலிதாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு திடீர் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இன்று நடக்க இருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை முதல்வர் ஜெயலலிதா திடீரென ரத்து செய்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நிருபர்களை ஜெயலலிதா சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்துகோட்டையில் நிருபர்கள் குவிந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் அந்தச் சந்திப்பு ரத்தானது.
இந் நிலையில் இன்று காலை பத்திரிக்கையாளர்களை ஜெயலலிதா சந்திப்பார் என்று செய்தித்துறை அதிகாரிகள்தெரிவித்திருந்தனர். ஆனால், இந்தச் சந்திப்பும் திடீரென ரத்தாகிவிட்டது. இதற்கான காரணம் எதையும்அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
பணிச் சுமை காரணமாக அவரால் பத்திரிக்கையாளர்களை சந்திக்க முடியவில்லை என்று சில அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications