16வது முறையாக ஏமாற்றியது கர்நாடகம்: அமைச்சர்களுடன் ஜெ. ஆலோசனை
சென்னை:
காவிரி விவகாரம் குறித்து தமிழக அமைச்சரவை இன்று அவசரமாகக் கூடி விவாதித்தது.
அணைக்கு வினாடிக்கு 192 கன அடி தான் நீர் வந்து கொண்டுள்ளது. ஆனால் சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்குதண்ணீர் வழங்கவே வினாடிக்கு 1,083 அடி நீரைத் திறந்துவிட வேண்டியுள்ளது.
இதனால் தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கடலூர், திருச்சி போன்ற காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு குறுவைசாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் போக வாய்ப்பே இல்லை. கர்நாடகத்தில் இருந்தும் நீர் வந்தபாடு இல்லை.
காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பின்படி ஆண்டுதோறும் மேட்டூருக்கு கர்நாடகம் 205 டி.எம்.சி. நீரைத்திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டுக்கு கர்நாடகம் வெறும் 95 டி.எம்.சி. நீர் தான் தந்தது.கிட்டத்தட்ட 110 டி.எம்.சி. நீரை மிச்சம் வைத்துள்ளது.
தமிழகத்துக்கு சரியான நேரத்தில் நீர் தராமல் கர்நாடகம் ஏமாற்றுவது இது 16வது முறையாகும்.
இப்போதைக்கு கர்நாடகத்தில் இருந்து நீர் வக வாய்ப்பு இல்லை என்பதால் குறுவை நெல்லுக்குப் பதிலாக பயறுபோன்ற மாற்றுப் பயிர்களை பயிரிடுமாறு காவிரி டெல்டா விவசாயிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது நெற் களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியைஅளித்துள்ளது. இனி காவிரியை நம்பி நெல் பயிரிடவே முடியாத நிலை நிரந்தரமாக ஏற்பட்டுவிடுமோ என்றஅச்சத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.
இந் நிலையில் தான் மாற்றுப் பயிர்களைப் பயிரிட விவசாயிகளுக்கு உதவுவது குறித்து விவாதிக்கவும், அதேநேரத்தில் கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெறுவது குறித்தும் ஆலோசிக்க இன்று அமைச்சரவைக் கூட்டம்நடந்தது.
கோட்டையில் நடந்த இக் கூட்டத்தில், ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காவிரி வழக்கில் புதிதாகமனு போட்டு கர்நாடகத்தை நிர்பந்திப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள்தெரிவித்தன.
சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்திற்குப் பின் நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது.புதிய அமைச்சர்கள் 5 பேரும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மேட்டூர் நிலவரம் குறித்து தமிழக அரசின் தலைமை பொதுப் பணித்துறைப் பொறியாளர்சுப்பிரமணியம் தந்துள்ள அறிக்கையுைம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுவிவாதிக்கப்பட்டது.
காவிரி தவிர வறட்சி நிவாரணப் பணிகள், குடிநீர்ப் பிரச்சினை ஆகியவையும் குறித்தும்விவாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் கடும் குடிநீர் பஞ்சம்:
இதற்கிடையே காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால், ஈரோடு நகரில் கடும் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
காவிரி ஆற்றிலிருந்துதான் ஈரோடு நகருக்கு குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. கடும் கோடைவெப்பம் காரணமாகவும், மழை இலலாத காரணத்தாலும் காவிரி ஆறு வறண்டு விட்டது. இதனால்நகரில் குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குழாய்களில் குடி தண்ணீர் வந்து பலநாட்கள் ஆகிவிட்டன.
காவிரியில் தண்ணீர் சுரப்பு அதிகம் உள்ள ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியிலும்நிலத்தடி நீர் வற்றி விட்டது. இதனால் அங்கிருந்தும் தண்ணீர் எடுக்க முடியவில்லை. ஈரோடுக்குவெளியே இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.அதுவும் போதுமான அளவுக்கு இல்லை.
குடிநீர் இல்லாத காரணத்தால் ஈரோடு மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். குடங்களுடன்தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர்.
-
சென்னையில் பில்டிங் கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் விஜய் உத்தரவு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
டாஸ்மாக் ஊழியர்கள் 200 பேர் சஸ்பெண்ட்.. பாட்டிலுக்கு 10 ரூபா ஒழிக்காம விடமாட்டேன்.. விஜயின் சபதம்! -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு! -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
தமிழ்நாட்டில் விஜய்.. தெலங்கானாவில் விஜய் தேவரகொண்டா! உற்று பார்க்கும் தெலுங்கு மக்கள்! என்ன மேட்டர்












Click it and Unblock the Notifications