ஹவாலா மோசடி: ரூ. 45 லட்சம் பணத்துடன் கேரள கும்பல் கைது
சென்னை:
ரூ. 45 லட்சம் ஹவாலா பணத்துடன் கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 அறைகளை வடைகைக்கு எடுத்தனர். ஹம்சாவும் ஹதீனாவும் தங்களை கணவன், மனைவி என்றுகூறினர். மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்ததாகவும் கூறினர். ஆனால், அவர்களதுநடவடிக்கைளில் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர் போலீசுுக்குத் தகவல் தந்தார்.
உடனடியாக விரைந்து வந்த போலீஸார் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர். ஹம்சா, ஹசீனாஆகியோர் தங்கியிருந்த அறையைச் சோதனையிட்டனர். அப்போது அவர்களது பெட்டியில் ரூ. 45லட்சம் பணம் இருந்தது.
இந்தப் பணம் எப்படி வந்தது என்பதற்கு இவர்களால் உரிய விளக்கம் தர முடிவில்லை. தொடர்ந்துநடத்திய விசாரணையில் தான் இது ஹவாலா பணம் என்று தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதற்கு முன்பும் இதுபோல ஹம்சாவும்,ஹசீனாவும் 4 முறை ஹவாலா பணத்தை சென்னையில் இருந்து கேரளாவுக்குக் கொண்டுசென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் பணத்தைசட்டவிரோதமாக அனுப்ப ஹவாலா முறை பயன்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications