For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தண்ணீர் தொட்டியில் ஏறி நின்று மாஜி கொள்ளையர்கள் கலாட்டா

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலத்தில் குடிநீர்த் தொட்டியில் ஏறி நின்று, அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகமிரட்டிய 2 முன்னாள் கொள்ளையர்களை கலெக்டர் ராதாகிருஷ்ணன் பேச்சு நடத்தி பத்திரமாக கீழே இறங்கி வரச்செய்தார்.

Youths on water tank
தொட்டியின் மீது நின்று கொண்டு...
சேலம் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 50 அடி குடிநீர்த் தொட்டியில் காலையில் இரு வாலிபர்கள்ஏறினர். குடிநீர்த்துறை ஊழியர்கள் தான் என நினைத்து அனைவரும் சும்மா இருந்துவிட்டனர்.

இந் நிலையில் தொட்டியின் உச்சிக்குப் போன அந்த இருவரும் திடீரென அங்கிருந்து கத்தினர்.

நாங்க கீழே குதிச்சு தற்கொலை செய்ய போறோம். கலெக்டர கூப்பிடுங்க. ஒரு விஷயத்தை சொல்லிட்டு சாகிறோம்என்று குரல் தர கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

டேய், கீழே வாங்கடா என பாராவுக்கு நின்றிருந்த போலீஸ்காரர்கள் குரல் தரவே இருவரும் தொட்டியின் ஓரத்துக்குவந்து குதிப்பது போல மிரட்ட போலீசார் மிரண்டு போய் உயர் அதிகாரிகளிடம் ஓடினர்.

உடனே தகவல் பறக்க இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் ஒரு படையும் தீயணைப்புப் படையினரும்ஆம்புலன்சும் அங்கு விரைந்து வந்தன. கலெக்டர் அலுவலக வருவாய்த்துறை அதிகாரிகளும் இன்ஸ்பெக்டரும்மைக் மூலமாக அவர்களுடன் பேசினர்.

ஆனால், கலெக்டரை கூப்பிடுங்கள் என்று கூறிவிட்டு இருவரும் டாங்க் ஓரத்தில் வந்து ஆபத்தான முறையில்நின்றனர்.

இதற்குள் சேலத்துக்கு வெளியே கிராமப் பகுதியில் பயணத்தில் இருந்த கலெக்டர் ராதாகிருஷ்ணனும் தகவல்அறிந்து அங்கு விரைந்து வந்தார். வந்தவுடன் இன்ஸ்பெக்டரிடம் இருந்த மைக்கை வாங்கியவர் நான் கலெக்டர்பேசுறேன். கீழே வாங்கப்பா என்றார்.

அவரைப் பார்த்தவுடன் ஐயா என்று தொட்டியில் மேல் இருந்தபடியே இருவரும் கையைத் தூக்கிக் கும்பிட்டுஅழுதனர். உடனே போலீசாரை விலகிப் போகச் சொல்லிய கலெக்டர் இருவரையும் கீழே வாங்க. உங்கபிரச்சனையை உடனே தீர்க்குறேன் என்று உறுதிமொழி தந்தார்.

இதையடுத்து ஒரு வாலிபர் மட்டும் தொட்டியில் இருந்து இறங்கி வந்தார். வந்தவுடன் அவரைப் பிடிக்க போலீசார்வர ஒதுங்கிப் போகச் சொன்னார் ராதாகிருஷ்ணன்.

கலெக்டர் அலுவலகத்தில் கூடிவிட்ட ஆயிரக்கணக்கான பொது மக்கள் முன்னிலையில், அந்த வாலிபர்காலெக்டரின் காலைப் பிடித்துக் கொண்டார். அவரைத் தூக்கி நிறுத்தினார் ராதாகிருஷ்ணன்.

Collector Radhakrishnan
கலெக்டர் ராதாகிருஷ்ணனுடன்
(படங்கள் நன்றி- தினகரன்)

அவரிடம் அழுதபடியே பேசிய அந்த வாலிபர் கூறியதாவது:

ஐயா, என் பேரு அர்த்தனாரி. சேலம் பொன்னம்மா பேட்டையில இருக்கேன். மேலே நிக்கிறவன் பேரு ராஜசேகர்.அவனும் என் வீட்டாண்ட தான் இருக்கான். எங்கள பேசாம கொன்னு போட்டுருங்கய்யா. எங்கள போலீஸ்நிம்மதியா வாழ விட மாட்டீங்குது. எங்க திருட்டு நடந்தாலும் எங்களை வந்து இழுத்துட்டுப் போயிடுறாங்கஎன்றார்.

இதையடுத்து மேலே பார்த்த ராதாகிஷ்ணன், தொட்டியில் இருந்த இன்னொருவரையும் பார்த்து நீயும் வாப்பாஎன்று அழைக்க அந்த வாலிபரும் இறங்கி வந்தார்.

இதற்கு மேல் அங்கு சீன் கிரியேட் செய்ய வேண்டாம் என்று நினைத்த ராதாகிருஷ்ணன் இருவர் தோளிலும் கைபோட்டபடி தனது அறைக்குள் அழைத்துச் சென்றார்.

அவரிடம் இருவரும் கூறியதாவது:

நாங்க இரண்டு பேரும் முன்னால குற்றம் செஞ்சவங்க தான். பல தடவை சிறைக்குப் போய் இருக்கோம். ஆனால்,இப்போ திருந்தி வாழ ஆரம்பிச்சுட்டோம். கடந்த 2 வருஷமா எந்தத் தப்பும் செஞ்சது இல்லீங்க. ஆனாலும்எங்களை போலீஸ் விட மாட்டீங்குது ஐயா.

எங்க திருட்டு நடந்தாலும் எங்க வீட்டுக் கதவை தட்டுறாங்க. நேரம், காலம் எதுவும் கிடையாது. எப்போவேணும்னாலும் போலீஸ் வரலாம்ங்கிற பயத்துல எங்க குடும்பங்கள் நிமமதியைத் தொலைச்சிருச்சு.

யோகாசனம், ஓவியப் பயிற்சின்னு எங்களை வேறு திசைகள்ள நாங்க திருப்பிக்கிட்டோம். பழம் வித்துபிழைக்கிறோம். ஆனால், எங்களைப் பிடிச்சு அடிக்கடி உள்ளே போட்டுர்றாங்க. இதனால பழ வியாபாரத்தைக் கூடசெய்ய முடியலை. குடும்பங்களும் பசியில கிடக்குற நிலைமை ஏற்படுது.

திருந்தினால் இவ்வளவு கொடுமைகள் ஏற்படும் தெரிஞ்சா திருந்தியிருக்கவே மாட்டோம்யா. இப்படி ஒருபிழைப்பு எங்களுக்குத் தேவையா. நீங்களே எங்களை அடிச்சு கொல்லுங்கய்யா என்றனர்.

இதில் ராஜசேகர் கூறுகையில், நான் என் ஊனமான தங்கச்சிய கரை சேர்க்கனும்யா. அது தான் என் லட்சியம்.ஆனால், போலீஸ் தொல்லையால அந்தப் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கூட அமைச்சுத் தர முடியலைஎன்றார்.

இருவரின் பேச்சையும் கலெக்டர் சீரியஸாகக் கேட்டுக் கொண்டே அவர்களது கையை கவனிக்க, கைகளில் ரத்தம்வழிந்து கொண்டிருந்ததைப் பார்த்து என்னப்பா இது என்றார். தண்ணீர் தொட்டியின் மேல் நின்று இருவரும்கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டதைச் சொல்ல, தனது பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து ரத்தத்தைராதாகிருஷ்ணன் துடைக்க இருவரும் மீண்டும் அவர் காலில் விழுந்தனர்.

உடனே தாசில்தாரை அழைத்த ராதாகிருஷ்ணன், இவர்களிடம் ஒரு புகார் வாங்கிகிட்டு போலீசார் மீதுவிசாரணையை ஆரம்பிங்க. திருட்டு வழக்கில் தவறான ஆட்களை போலீசார் கைது செய்தது ஏன்னு தெரியனும்.விசாரிச்சு அறிக்கை கொடுங்க என்றவர் வாலிபர்கள் பக்கம் திரும்பினார்.

போலீஸ் செஞ்சது தப்பா இருக்கலாம். ஆனால், நீங்க தண்ணி தொட்டியிலே ஏறி நின்று தற்கொலை பண்ணப்போறதா மிரட்டுனது அதைவிடத் தப்பு. அதுக்கு நீங்க தண்டனை அனுபவிச்சுத் தான் ஆகணும். சரியா என்றார்.

சரிங்கய்யா என்று இருவரும் கோரஸாகக் கூற இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய கலெக்டர் ராதாகிருஷ்ணன், தப்பு செஞ்ச போலீஸ் மீது நிச்சயம் நடவடிக்கைஎடுக்கப்படும். இந்த இருவருக்கும் நல்ல வாழக்கையை அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் சார்பில் நிச்சயம் உதவிசெய்வேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X