For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் ஆட்டம் போட்டதில்லை..: கருணாநிதிக்கு எதிராய் டி.ஆர். சுருக் அறிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது ஏன் என்றுதிமுக தலைவர் கருணாநிதிக்கு, டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீப காலமாக திமுகவில் அதிருப்தியுடன் தான் இருந்து வந்தார் டைரக்டர் டி.ராஜேந்தர். இதையடுத்து கட்சியின்கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து அவரை நீக்கினார் கருணாநிதி. இதையடுத்து திமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தை புறக்கணித்தார் ராஜேந்தர்.

இது வரை தனது பதவிப் பறிப்பு குறித்து வெளிப்படையாக ஏதும் பேசாமல் இருந்த ராஜேந்தர் இன்று பரபரப்புஅறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்:

எனக்கு ஏன் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி திரும்பவும் கிடைக்கவில்லை என்று பத்திரிக்கையாளர்கேட்டதற்கு, கலைஞர் தனக்கு உரிய தோரணையில் ஒரு விளக்கம் கொடுத்தார். (என்னைத் தவிர திமுகவில் யார்மீது நம்பிக்கை இல்லை என்று ராஜேந்தர் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். கட்சி மீது நம்பிக்கைஇல்லாதவருக்கு பதவி தர முடியாது என்று கருணாநிதி கூறியிருந்தார்).

நான் திரையுலகில் எம்.ஜி.ஆரின் ரசிகன், அரசியலில் நான் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் கலைஞர் என்று தான்பத்திரிக்கைக்கு பேட்டி தந்தேன். பல இடங்களிலும் இதை வெளிப்படையாகவே பேசினேன். பத்திரிக்கைப்பேட்டி வந்து எத்தனையோ மாதங்கள் ஆன பிறகும் அது குறித்து என்னிடம் கட்சி விளக்கம் கேட்காதது ஏன்?

விளக்கம் கேட்பது கட்சியில் மரபில்லையா? அல்லது என்னிடம் விளக்கம் கேட்கும் அளவுக்கு எனக்குத் தகுதிஇல்லையா? இத்தனை நாள் கழித்து விளக்கமே கேட்காமல் நடவடிக்கை எடுத்திருப்பது ஏன்?

நான் சார்ந்துள்ள கட்சியின் தலைவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வது குற்றமா?

ஒரு திருமணமான பெண் தன் கணவனைத் தான் கணவனாக நினைக்கிறேன் என்று சொல்லலாம். மற்றவர்களைமதிக்கலாம். மாமனாரை தந்தையைப் போல நிக்ைகிறேன், கொழுந்தநாரை கூடப் பிறந்த சகோதரனைப் போலநினைக்கிறேன் என்று தொல்லலாம். அதை விட்டுவிட்டு எல்லோரையும் கணவரைப் போல கருதுகிறேன் என்றபசொல்ல முடியுமா?

நான் பேராசிரியர் அன்பழகனை பொதுச் செயலாளராக மதிக்கிறேன். ஆற்காடு வீராசாமியை பொருளாளராகமதிக்கிறேன். வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி.மணி உள்ளிட்டவர்களை மாவட்டச் செயலாளர்களாக நினைக்கிறேன்,மதிக்கிறேன்.

இவர்களை எல்லாம் நான் கலைஞருக்குச் சமமாக ஏற்றுக் கொள்ள வேணடும் என்று அவர் நினைக்கிறாரா?.கலைஞரை நான் தலைவர் என்று சொன்னதற்கு இது தான் பரிசா?. இந்தப் பரிசை நான் பெருமையாகநினைக்கிறேன்.

என்னிடம் விளக்கம் கூடக் கேட்காமல் வெறும் பத்திரிக்கைச் செய்தியை மட்டும் வைத்து எடுத்தேன், கவிழ்த்தேன்என்று கலைஞர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

என்னைப் போலவே கலைஞரின் தலைமையை மட்டும் நம்பி இயக்கப் பணியும், தியாகங்களூம் செய்தஎத்தனையோ உடன் பிறப்புக்கள் பலர் ஏதோதோ காரணம் சொல்லி ஓரம் கட்டப்பட்டிருக்கிறார்கள், ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறார்கள், பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள், பழிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

நான் பதவியை வைத்து சம்பாதித்து இருந்தால் தானே, அந்தப் பதவி போய்விட்டதே என்று வருத்தப்பட.கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை வைத்துக் கொண்டு நான் ஆட்டம் போட்டதில்லை. இப்போது பதவிபோனதால் எனக்கு வாட்டம் இல்லை.

வைகோ பிரிந்தபோது திமுக இக்கட்டான கால கட்டத்தில் இருந்தபோது கலைஞர் அழைத்தார் என்பதற்காக, 6ஆண்டு காலம் கட்டிக் காத்த எனது தாயக மறுமலர்ச்சிக் கழகத்தைக் கலைத்துவிட்டு திமுகவுக்கு வந்தேன்.

இப்போது கலைஞர் எனக்கு சரியான பரிசு கொடுத்திருக்கிறார். எனது தாயக மறுமலர்ச்சிக் கழகத்தை திமுகவில்இணைத்தது நான் செய்த தவறு. தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். அதை நான்அனுபவிக்கிறேன்.

திமுகவில் நான் பட்ட அவமானங்கள், காயங்கள் தான் அதிகம். ஒரு காலத்தில் நான் குடியிருந்த வீடே கலைஞர்ஆட்சியில் தான் இடிக்கப்பட்டது. ஆனாலும் மறப்போம், மன்னிப்போம் என திமுகவில் சேர்ந்தேன்.

திமுகவில் கலைஞரும் அவரது மகனும் கொடி கட்டிப் பறக்க நினைக்கிறார்கள். கலைஞர் தன் வாழ்க்கையில்எத்தனையோ முறை கணக்குப் போட்டிருக்கிறார். இப்போதும் ஏதோ கணக்குப் போட்டுத் தான் என்னைநீக்கியிருக்கிறார். அந்தக் கணக்கு கலைஞருக்கும், எனக்கும், கட்சியின் கடைக் கோடி தொண்டனுக்கும் தெரியும்.

இவ்வாறு ராஜேந்தர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X