தமிழர் விடுதலை இயக்கத்துக்கு அரசு தடை
சென்னை:
தமிழர் விடுதலை இயக்கம் அமைப்புக்கு தமிழக அரசு இன்று தடை விதித்தது.
இதற்கு முன் தமிழ் தேசிய விடுதலைப் படை (டி.என்.எல்.ஏ), தமிழ்நாடு மீட்சிப் படை (டி.என்.ஆர்.டி), தமிழ்தேசிய இயக்கம் ஆகிய அமைப்புகளுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இப்போது நான்காவதாக தமிழர்விடுதலை இயக்குமும் தடை செய்ய்பட்டுள்ளது.
இந்த இயக்கத்தினர் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்திவருவதாகவும், வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்துவது, ஆட்களைக் கடத்திப் பணம் பறித்து வருவதாகவும் தமிழகஅரசு கூறியுள்ளது.
மேலும் இந்த அமைப்பினர் தலித்கள், பழங்குடியினருக்கு எதிராக கொடுமைகளும் செய்து வருவதாகவும் அரசுகூறியுள்ளது.
இந்த அமைப்பினரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதால் இது தடை செய்யப்படுவதாக தமிழக அரசின்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தடையை எதிர்க்க விரும்பினால் 30 நாட்களுக்கு அதற்கான அப்பீல்மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


