தா.கியின் தம்பி ரகசிய வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை 7-வது குற்றவியல் நீதிமன்றத்தில், தா.கிருட்டிணனின் தம்பி ராமய்யா, ரகசிய வாக்குமூலம் ஒன்றைக்கொடுத்துள்ளார். அதில் தா.கி. கொலையில் மு.க.அழகிரியை அவர் நேரடியாகவே குற்றம் சாட்டியிருப்பதாகத்தெரிகிறது.

இந் நிலையில் ராமய்யாவைச் சந்திக்கப் போவதாகவும், அவருக்கும் கிருட்டிணனின் குடும்பத்தினருக்கும்பாதுகாப்பு வங்கப் போவதாகவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தா.கியைக் கொலை செய்யத் தூண்டியது அழகிரிதான் என்று ஆரம்பத்தில் இருந்தே ராமய்யா கூறி வருகிறார். இந்நிலையில் மதுரை 7-வது குற்றவியல் நீதிமன்றத்தில் தானாகவே ஆஜரான ராமய்யா, நீதிபதி சேகரனிடம் ரகசியவாக்குமூலம் அளித்தார்.

அவர் வாக்குமூலம் அளித்தபோது நீதிமன்றத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் வெளியே வந்த ராமய்யாவிடம் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீதிமன்றத்தில் நான் எல்லாவற்றையும்தெளிவாகக் கூறிவிட்டேன். அழகிரிதான் இந்தக் கொலைக்குக் காரணம்,

அத்தோடு திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமனும் உடந்தை என்று கூறியுள்ளேன். மறுபடியும்அதையேதான் கூறியுள்ளேன். மேலும் சில விவரங்களையும் தெரிவித்துள்ளேன். அதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது.

திமுக தலைவர்களால் எங்களது குடும்பம் பட்ட கஷ்டத்தைப் புரிந்து கொண்ட திமுகவினர் கட்சியிலிருந்துவெளியேறி வருகிறார்கள். எங்களை சந்திக்கக் கூடாது என்று திமுகவினருக்கு கட்சி மேலிடம்கட்டளையிட்டுள்ளது.

தினசரி சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும் எங்கள் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல்கள்வந்தவண்ணம் உள்ளன. இதனால் விரைவில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து முறையிடவுள்ளேன், எங்களுக்குபோலீஸ் பாதுகாப்பு கொடுக்குமாறு கோருவேன்.

விசாரணையை விரைவுபடுத்துமாறும் ஜெயலலிதாவிடம் கோரவுள்ளேன் என்றார்.

பாதுகாப்பு தரப்படும்: ஜெ. அறிவிப்பு

இந் நிலையில் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் ஜெயலலிதா,

தா.கிருட்டிணனின் தம்பி ராமய்யா என்னைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். அவரை நான் சந்திப்பேன்.அவருக்கும் தா.கி. குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கேட்டுள்ளார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+