38 மெட்குலேஷன் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து
சென்னை:
தமிழகம் முழுவதும் 38 மெட்குலேஷன் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை மாநில அரசு ரத்துசெய்துள்ளது. இதில் 6 பள்ளிகள் சென்னையைச் சேர்ந்தவை.
அங்கீகாரம் ரத்தான பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில்மாற்று ஏற்பாடுகளை கல்வித்துறை செய்துள்ளது. இவர்கள் அனைவரும் அங்கீகாரம் பெற்ற பிற பள்ளிகளில்சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
தற்சமயம் தமிழகத்தில் அங்கீகக்கப்பட்ட 2,059 மெட்குலேஷன் உயர் நிலைப் பள்ளிகளும், 1,391மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளிகளும் உள்ளன.
இந்த ஆண்டு மட்டும் 100 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 25 சதவீத மெட்ரிகுலேஷன் பள்ளிகள் முறையான அங்கீகாரமே இல்லாமல் நடத்தப்பட்டு வருவதாகமெட்ரிகுலேஷன் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. விரைவில் இவை அனைத்தும் அங்கீகாரம் இழக்கும்என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications