For Daily Alerts
Just In
இன்றும் சென்னையில் லேசான மழை பெய்யலாம்!!
சென்னை:
சென்னை நகரில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்றிரவு லேசான மழை பெய்தது. இதனால் நகரவாசிகள் மனம்குளிர்ந்தனர்.
மாலையில் சென்னை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்தது.
இந்த மழை காரணமாக நகரின் வெப்பநிலை கணிசமாகக் குறைந்தது. நுங்கம்பாக்கத்தில் 38.2 டிகிரி செல்சியஸும்,மீனம்பாக்கத்தில் 38.7 டிகிரி செல்சியஸுமாக வெப்பநிலை பதிவானது.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இந்த மழை பெய்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இன்றும் காலையிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமாக உள்ளது. நேற்று போல மாலையில் லேசான மழை பெய்யும்வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
மதுரையில் நேற்று நல்ல மழை பெய்தது. மூன்று மில்லிமீட்டர் அளவுக்கு பெய்த மழையால் நகரின் பல்வேறுபகுகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது.


