அழகிரியின் வீடியோ கடையில் ரெய்ட் சோதனை- 3,800 திருட்டு விசிடிக்கள் பறிமுதல்
மதுரை:
மதுரை பஸ் நிலைய வளாகத்தில் உள்ள அழகிரியின் ராயல் வீடியோஸ் கடையில் இன்று திருட்டு விசிடி ஒழிப்புப்பிரிவு போலீசார் 3 மணி நேரம் சோதனை நடத்தி சுமார் 3,800 விசிடிக்களைப் பறிமுதல் செய்தனர்.
-->இந்தக் கடையை நிர்வகித்து வந்த தாமோதரன் என்பவரையும் போலீசார் கைது செய்யப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை இந்தக் கடையில் ரெய்ட் நடந்தது. அப்போது பல புதிய படங்களின் திருட்டு விசிடிக்கள்இருப்பது தெரியவந்தது. ஆனால், தா.கிருட்டிணன் கொலை தொடர்பாக ஆவணங்களைத் திரட்ட வந்த அந்தப்போலீசார் இந்த வீடியோக்களைக் கைப்பற்றவில்லை.
ஆனால், புதிய பட விசிடிக்கள் இருப்பது குறித்து சென்னைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து திருட்டு விசிடிசோதனை நடத்துமாறு திருச்சி திருட்டு விசிடி ஒழிப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் மோகனுக்கு உத்தரவு பறந்தது.
அவர் நேற்று காலை தனது படையுடன் மதுரை வந்தார். ஆனால், அழகிரியின் கடை மூடப்பட்டிருந்தது.ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை மூடப்பட்டுள்ளதாக பக்கத்து கடையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து கடையின் சாவியை வாங்கி வர அழகிரியின் வீட்டுக்கு இந்த போலீசார் சென்றனர்.ஆனால், வீடும் பூட்டப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை இன்ஸ்பெக்டர் மோகன்இந்தக் கடைக்கு தனது படையுடன் வந்தார்.
காலை 10 முதல் அந்தக் கடையில் சோதனை நடத்தினார். கைப்பற்றப்பட்ட புதிய படங்களின்விசிடிக்கள், உரிமம் பெறதாக விசிடிக்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். கடையை நிர்வகித்து வந்தமேனேஜர் தாமோதரனையும் போலீசார் கைது செய்தனர்.
3 மணி நேரம் நடந்த இந்தச் சோதனை பகல் 1 மணிக்கு முடிவடைந்தது. சோதனையை முடித்துக்கொண்டு புறப்பட்ட போலீசார் சுமார் 3,800 விசிடிக்கள் மற்றும் ஆடியோ கேசட்டுகளை 20க்கும்மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் அள்ளிச் சென்றனர்.
இந்தக் கடையின் உரிமையாளர் என்ற வகையில் அழகிரி மீது திருட்டு விசிடி வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
-->-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications