விரைவில் அரசியல் அணிகள் மாறும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரசுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி சுட்டிக் காட்டியுள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்தின் நிருபர் ராமசாமிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி விவரம்:

அடுத்த மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதில் நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம். ஆனால்,கூட்டணி குறித்துப் பேச இது சரியான தருணம் அல்ல. தேர்தல் நெருங்கும்போது தான் அது குறித்து முடிவெடுக்கமுடியும்.

காற்று அடிக்கிறது. அரசியல் மேகம் கூடுகிறது. மழை வரும் அளவுக்கு மேகம் கூடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தேர்தல்களின்போது தான் மாற்றம் ஏற்படும். அதுவரை காத்திருக்கத் தான் வேண்டும்.

தன்னைச் சுற்றி அரசியல் மாற்றங்கள் நடப்பதையும் அரசியல் சித்து விளையாட்டுக்களையும் திமுக சும்மாஉட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. மாற்றங்களைக் கொண்டு வரும் கட்சி தான் திமுக.மாற்றங்களில் திமுகவின் பங்களிப்பு ரொம்பவே இருக்கும்.

மாநில மக்களின் உரிமைகள், தமிழர்களின் நலனை முன் நிறுத்தி தான் திமுக எந்த அரசியல் நிலைப்பாட்டையும்எடுக்கும்.

மத்தியில் காங்கிரஸல்லாத ஒரு அரசு 5 ஆண்டுகாலம் ஆட்சியில் நீடித்ததே ரொம்ப பெரிய விஷயம். தேசியஜனநாயகக் கூட்டணியால் நல்லது நடந்ததோ இல்லையோ நாட்டுக்கு கெடுதல் ஏதும் நேரவில்லை.

அயோத்தி விஷயத்தில் தே.ஜ.கூ. செயல் திட்டத்தில் இருந்து மத்திய அரசு விலகாது என்று நம்புகிறேன்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக என்னும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றாய்சேர்ந்தால் தான் அந்த இருள் விலகும். அந்த ஒற்றுமை முயற்சியை திமுகவே முன்னின்று எடுக்கும். அதற்கானநேரமும் வந்துவிட்டது.

திமுகவினர் மீது பொய் வழக்குப் போட மறுக்கும் அதிகாரிகள் பந்தாடப்படுகிறார்கள், ஜெயலலிதாவால்தண்டிக்கப்படுகிறார்கள் என்றார் கருணாநிதி.

முன்னதாக நேற்று அனைத்து நிருபர்களுக்கும் அவர் அளித்த பேட்டியில், வரும் மக்களவைத் தேர்தலில் திமுக-பா.ஜ.க. இடையிலான கூட்டணியில் மாற்றம் வரலாம் என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்தார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

கூட்டணி விஷயத்தில் எங்கள் கதவுகள் திறந்தே இருக்கின்றன. பா.ஜ.கவோடு கூட்டணியில் சேரும்போதுஅவர்கள் யாரையும் ஆதரிக்கக் கூடாது என்று, யாரையும் பாராட்டிப் பேசக் கூடாது என்று நாங்கள் விதிமுறைஏதும் விதிக்கவில்லை.

இதனால் அவர்கள் அதிமுகவோடு நெருக்கம் காட்டியபோதும், அதிமுகவைப் பாராட்டும்போதும் அதை நாங்கள்கண்டுகொள்ளவில்லை.

அதே நேரத்தில் கூட்டணிக்காக யாரிடமும் போய் நிற்கும் கட்சியல்ல திமுக. வீட்டுக்குள் ஒரு நண்பர் (பா.ஜ.க.)இருக்கிறார் என்பதற்காக கதவைப் பூட்டியா வைத்துவிட முடியும். கதவைத் திறந்து தான் வைக்க முடியும். அதுவேறு ஒரு நண்பர் உள்ளே வருவதற்காகவும் இருக்கலாம் அல்லது உள்ளே இருக்கும் நண்பர் வெளியேபோவதற்காகவும் இருக்கலாம் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+