சமையல் கேஸ் டேங்கர் லாரி டிரைவர்கள் ஸ்டிரைக் வாபஸ்
சென்னை:
கடந்த 14 நாட்களாக நடந்து வந்த கேஸ் டேங்கர் லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்கைவிடப்பட்டுள்ளது.
வேலை நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரு வாரங்களாகசமையல் எரிவாயு ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரி டிரைவர்கள், கிளீனர்கள் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.
இதனால் தமிழகம் முழுவதும் கேஸ் சிலிண்டெர் வினியோகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் சங்கம், எல்.பி.ஜி. கேஸ் உற்பத்தியாளர்கள் மற்றும் அரசுத்தரப்புக்கிடையே நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இந் நிலையில் நேற்று மாலை இரண்டாவது கட்டமாக டிரைவர்கள் சங்கத்திற்கும், தொழிலாளர் நலத்துறைஆணையருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் லாரி உரிமையாளர்கள் சங்கம் கலந்துகொள்ளவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வேலை நிறுத்தம் கைவிடப்படுவதாக டிரைவர்கள்சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,பேச்சுவார்த்தையின் இறுதியில் வேலை நிறுத்தத்தை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொண்டு, பணிக்குத் திரும்படிரைவர்கள் மற்றும் கிளீனர் சங்கம் ஒத்துக் கொண்டது.
மேலும், டிரைவர்கள், கிளீனர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கான பே ஸ்லிப் இனிமேல் அவர்களுக்குமாதந்தோறும் வழங்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றுகூறப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications