புதுமை படைத்த நாமக்கல் இளைஞர்கள்
நாமக்கல்:
இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல்
முறையாகக் குடியரசுத் தலைவர் ஒருவருக்கு ரசிகர் மன்றம் அமைத்துநாமக்கல் இளைஞர்கள் புதுமை படைத்துள்ளனர்.
சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களோடு, குஷ்புவுக்கு கோவில் கட்டிய கேவலம்
அரங்கேறிய நம் ஊரில்தமிழகத்தில் தான் இந்த நல்ல விஷயமும் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமைப்பட்டி அருகே உள்ளது முட்டாஞ்செட்டி என்ற குக்கிராமம். இந்தக்கிராமம்தான் கலாமுக்கு ரசிகர் மன்றம் வைத்து வரலாறு படைத்துள்ளது.
முட்டாஞ்செட்டியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான நியாமதுல்லாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
யார் யாருக்கோ ரசிகர் மன்றங்கள் அமைக்கிறார்களே, ஆனால் இந்தியாவை வல்லரசாக்கியே தீருவது என்றநோக்கத்துடன் உழைத்து வரும் கலாமுக்கு ஏன் ரசிகர் மன்றம் அமைக்கக் கூடாது என்று யோசித்த அவர், தனதுஊரைச் சேர்ந்த பிரபு, கண்ணன் என்ற வாலிபர்களுடன் யோசனையைத் தெரிவிக்க அவர்களுக்கு ரொம்பவேபிடித்துப் போனது.
இந்த மன்றம் நடத்திய முதல் விழா, தங்களது ஊரில் பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவியருக்கு உதவிகள் வழங்கும் விழா தான். கலாம் மன்றம் சார்பில் மாணவ, மாணவியருக்கு உதவி செய்யஉள்ளூர் மக்கள் பெரும் போட்டி போட்டனர்.
இந்த மன்றத்தில் தங்களது குழந்தைகளை பெற்றோரே அழைத்து வந்து உறுப்பினர்களாகச் சேர்த்துவிடஆரம்பித்திருக்கிறார்கள்.
மன்றம் குறித்து நியாமதுல்லா கூறுகையில், இன்றைய இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார்அப்துல் கலாம். தமிழனாகப் பிறந்து, இந்தியர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுவிட்டார். அவரால் நாடுபெற்ற பலன்கள் எத்தனையோ.
அவரது வாழ்க்கை நமக்கு ஒரு பாடம். அனைவருக்கும் ஒரு முன் மாதிரியாகத் திகழும் கலாம் பெயல் நற்பணிமன்றம் ஆரம்பித்து அதன் மூலம், சமூகத்துக்கு எங்களால் ஆன சிறிய தொண்டை செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.
இது தொடக்கம்தான், இந்தியாவின் ஒவ்வொரு குக்கிராமத்திலும், மூலை முடுக்கிலும் இதுபோன்ற சங்கங்கள்தொடங்க முயல்வோம் என்றார்.
நிச்சயம் வித்தியாசமான இளைஞர்கள்தான்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications