1,008 ஜோடிகளுக்கு ஜெ. தலைமையில் திருமணம்: கர்ப்பிணி விதவைக்கும் மறுமணம்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சென்னையில் நாளை 1008 ஏழை ஜோடிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா இலவச திருமணம் நடத்தி வைக்கிறார்.

இதற்காக மாநிலம் முழுவதும் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோடிகள் அந்தந்தப் பகுதி அதிமுகவினரின்செலவில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

திருவேற்காடு கோவிலில் இந்தத் திருமணம் நடக்கிறது. சேலத்தில் இருந்து மட்டும் 70 பேர் தேர்வு செய்யப்பட்டுசென்னைக்குப் புறப்பட்டனர். இதில் ஒருவர் கர்ப்பிணி விதவையாவார். இவரது பெயர் சுந்தரி (வயது 32).

இவருக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் சில மாதங்களுக்கு முன் இவரது கணவர்நடராஜன் மாரடைப்பால் காலமானார். அப்போது இவர் கர்ப்பிணியாக இருந்தார். இருப்பினும் இவருக்குமறுமணம் செய்து வைக்க பெற்றோர் முயன்றனர்.

அதிமுகவினர் இலவசத் திருமணம் செய்து வைப்பதை அறிந்து சுந்தரியின் பெயரையும் பதிவு செய்தனர். இதேபோல அதிமுக மூலம் திருணமம் செய்ய வந்த பட்டரைத் தொழிலாளியான விஜயராகவன் (வயது 33), சுந்தரிகுறித்து கேள்விப்பட்டு அவரைத் திருமணம் செய்ய முன் வந்தார்.

இது குறித்து ஜெயலலிதாவிடம் மாவட்ட அதிமுகவினர் தெரிவிக்க, நிச்சயம் இந்தத் திருணத்தை நடத்திவைப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து அவரும் விஜய்ராகவனும் இன்று சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்தப் பெண்ணுக்கு வேலைவாய்ப்புக்கும் அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிகிறது. சேலம் மேயர்மூலம் இவருக்கு சத்துணவுக் கூடத்தில் ஆயா வேலை தரப்படலாம் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+