விசாரணைக் கைதி சாவு: சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆயுள் தண்டனை
தேனி:
போலீஸ் காவலில் இருந்த கைதியின் சாவுக்குக் காரணமாக இருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு பெரியகுளம் விரைவுநீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கடந்த1995ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் தேதி,போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்ஆகியோரால் கைது செய்யப்பட்டார்,
பின்னர் தேனிக்குக் கொண்டு செல்லப்பட்ட பாண்டியன் அங்கு காவல் நிலையத்தில் வைத்து போலீஸாரால்துன்புறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
பின்னர் கொடைக்கானல் மற்றும் திருச்சிக்கும் அவர் விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். திருச்சியில்போலீஸ் காவலில் இருந்தபோது பாண்டியன் மர்மமான முறையில் இறந்தார்.
இதுதொடர்பாக உறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பாண்டியனின் சாவில் மர்மம் இருப்பதாகஅவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதைத் தொடர்ந்து பெரியகுளம் உதவி ஆட்சியர் குமார் ஜெயந்த், விசாரணை நடத்தி அறிக்கையை பெரியகுளம்விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கும் பதிவு செய்தார்.
இரண்டு காவல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தார். இதுதொடர்பாக பெரியகுளம்விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். விசாரணை முடிவில்,சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தேவகி தீர்ப்பளித்தார். இன்ஸ்பெக்டரும்இவரும் சேர்ந்து பாண்டியனை அடித்துக் கொன்றதாகத் தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications