அழகிரிக்கு ஆதரவாய் நடந்ததாக உதவி கமிஷ்னர் அதிரடி சஸ்பெண்ட்
மதுரை:
| அழகிரியிடம் அடாவடியாக நடந்து கொள்ள மறுத்த மதுரை உதவி போலீஸ் கமிஷ்னர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்..
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகிரி காவல்நீட்டிப்புக்காக இன்று மதுரை கொண்டு வரப்பட்டார். மதுரை ஆறாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வனிதா முன்அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அழகிரியின் காவலை வரும் ஜூலை 2ம் தேதி வரை 15 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் அழகிரி திரும்பவும் திருச்சி சிறைக்கு வேனில் கொண்டு செல்லப்பட்டார். |
|
இதையடுத்து அழகிரியும் மோகன்குமாரும் திருச்சியில் இருந்து மதுரை வரை ஆலோசித்துக் கொண்டே வந்தனர்.
இந்தத் தகவல் உடனடியாக மதுரை கமிஷ்னர் விஜய்குமாருக்குத் தெரிவிக்கப்பட்டது. சென்னைக்கும் இந்தத்தகவல் பறந்தது. இதைத் தொடர்ந்து உதவி கமிஷ்னர் ஹரிஹரனை சஸ்பெண்ட் செய்யுமாறு காவல்துறைதலைமையகம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஹரிஹரன் அதிரடியாக பதவி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக அழகிரி நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்படுவதையொட்டி, மதுரை நீதிமன்ற வளாகத்திற்குள்வக்கீல்களைத் தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், இதையும்மீறி உள்ளே நுழைய முயன்ற திமுக வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும்தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
ஜாமீன் மனு தள்ளுபடி:
இந் நிலையில் அழகிரியை ஜாமீனில் விடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டது. அழகிரிக்கு ஜாமீன் மறுக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
அழகிரி- ஸ்டாலின் சந்திப்பு:
இந் நிலையில் மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அழகிரியை திமுக துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது அழகிரியின் மனைவி காந்தி, மகன் துரையும் உடனடிருந்தனர்.சிறையில் உள்ள அழகிரியை ஸ்டாலின் சந்திப்பது இது இரண்டாவது முறையாகும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!













Click it and Unblock the Notifications