மாணவிகளை வேலைக்காரிகளாக்கும் நர்சிங் கல்லூரி!!
மதுரை:
மதுரை பசுமலையில் உள்ள சி.எஸ்.ஐ. ஜெயராஜ் நாடார் அன்னபாக்கியம் செவிலியர் பயிற்சிக் கல்லூரியில்(நர்சிங் காலேஜ்) பயிலும் மாணவிகளை தனி நபர்களின் வீடுகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வேலை வாங்கிவருகிறது கல்லூரி நிர்வாகம்.
இவ்வாறு செல்லும் மாணவிகளில் சிலர் அந்த வீட்டு ஆண்களால் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இதைஎதிர்த்து பலமுறை மாணவிகள் போராட்டம் நடத்தியும் ஜெயராஜ் நாடார் கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளாமல்இருந்து வருகிறது.
நிர்வாகத்தின் இந்தக் கேவலமான செயலை எதிர்த்து மதுரையில் நாளை இக் கல்லூரி உண்ணாவிரதப் போராட்டம்நடத்தப் போவதாக மாணவிகளும், ஆசிரியைகளும் அறிவித்துள்ளனர்.
மதுரை அருகே காமராஜர் பலகலைக்கழகத்துக்குச் செல்லும் வழியில் பசுமலை பகுதியில் உள்ளது ஜெயராஜ்நாடார் அன்னபாக்கியம் நர்சிங் கல்லூரி.
சில தனியார் வீடுகளில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க இந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அனுப்பிவருகிறது. நோயாளிகளுடன் இருந்து நர்சிங் உதவிகளை இந்த மாணவிகள் செய்ய வேண்டும்.
இதற்காக அந்த தனியார் நபர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிக் கொள்கிறது இக் கல்லூரி நிர்வாகம். அதேநேரத்தில் மாணவிகளுக்கு இதற்காக ஊதியம் ஏதும் தரப்படுவதில்லை. படிப்பில் ஒரு அங்கமாக இந்தவேலைகளையும் செய்து தான் ஆக வேண்டும் என மாணவிகளை நிர்பந்தித்து வருகிறது கல்லூரி.
இவ்வாறு தனி நபர்களின் வீடுகளுக்குப் போக மறுக்கும் மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம்,மதிப்பெண் கிடைக்காமல் செய்வோம் என்று மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்குப் பயந்து மாணவிகள் தனி நபர்களின் வீடுகளுக்கு வேலைக்கு செல்வதாகவும் தெரிகிறது.
வேலைக்கு செல்லும் மாணவிகள் அந்த வீடுகளில் வேலைக்காரிகள் போல நடத்தப்படுவதாகவும், அவர்களின்வீடுகளில் தங்குவது மிகவும் சிரமமாக இருப்பதாகவும் மாணவிகள் கூறுகின்றனர்.
மேலும், இவ்வாறு தனி நபர் வீடுகளுக்குச் செல்லும் நர்சிங் மாணவிகளில் சிலருக்கு அந்த வீட்டு ஆண்களால்தொல்லை நேர்ந்து வருவதாகவும் தெரிகிறது.
இதைத் தட்டிக் கேட்ட சில ஆசிரியைகளை கல்லூரி நிர்வாகம், பெரியகுளம் போன்ற இடங்களில் உள்ள தங்களதுமற்ற கல்லூரிகளுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்து விட்டதாகவும் மாணவிகள் கூறுகின்றனர்.
நிர்வாகத்தின் இந்தப் போக்கைக் கண்டித்து, மதுரை தல்லாகுளம் தந்தி அலுவலகம் முன் நாளை உண்ணாவிரதப்போராட்டம் நடத்த மாணவிகளும், ஆசிரியைகளும் முடிவு செய்துள்ளனர்.
கல்வியை விற்கும் தனியார் கல்லூரிகள் மத்தியில், படிக்க வரும் மாணவிகளையே தனியார் வீடுகளுக்கு காசுக்காகஅனுப்பி வரும் இந்தக் கல்லூரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications