ஜெயலலிதாவுடன் அன்பழகன் சந்திப்பு: கிளம்பியது அரசியல் புரளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்துக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக திமுக பொதுச் செயலாளரும்எதிர்க் கட்சித் தலைவருமான அன்பழகனுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

ஆனால், கருணாநிதி திருச்சியில் இருந்த நிலையில் இச் சந்திப்பு நடந்ததால் அன்பழகன் கட்சி மாறப் போவதாகஅரசியல் வட்டாரத்தில் புரளி கிளம்பியது. குறிப்பாக வட இந்தியத் தொலைக்காட்சிகள் இந்தப் புரளியை பெரும்அளவில் ஊதிவிட்டதால் நேற்று மாநிலம் முழுவதும் திமுகவினரிடையே பெரும் குழப்பம் நிலவியது.

மனித உரிமை ஆணையத்துக்குத் தலைவர், 3 உறுப்பினர்களை மாநில அரசு நியமிக்க வேண்டும். அவர்களைநியமிக்கும் முன் முதல்வர், சபாநாயகர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் ஆலோசனை நடத்த வேண்டும் என்பதுவிதிமுறை. மூவரும் சேர்ந்தே உறுப்பினர்களையும் தலைவரையும் இறுதி செய்து ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.

இதற்காக முதல்வர் ஜெயலலிதாவை அன்பழகன் கோட்டையில் சென்று சந்தித்துப் பேசினார். அப்போது திமுகதலைவர் கருணாநிதி திருச்சியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அழகிரியைக் காணச் சென்றுவிட்டார்.

ஜெயலிலதாவைச் சந்தித்த அன்பழகன் வெளியே நிருபர்களிடம் பேசுகையில், மரபுப்படி எனக்கு அழைப்புஅனுப்பப்பட்டது. எனவே வந்தேன். இதில் அரசியல் எதுவும் இல்லை என்றார். இச் சந்திப்புக்கு கருணாநிதியின்அனுமதி பெறப்பட்டதா போன்ற கேள்விகளுக்கு அவர் பதில் தரவில்லை.

அதே போல அரசுத் தரப்பில் இருந்தும் இச் சந்திப்புக்கான காரணம் விளக்கப்படவில்லை. இதனால் இச்சந்திப்புக்கு அரசியல் சாயம் பூசப்பட்டது. குறிப்பாக வட இந்திய ஆங்கில, இந்தி டிவி சேனல்களில் அன்பழகன்கட்சி மாறலாம் என்றரீதியில் செய்திகள் ஒளிபரப்பப்பட்டன.

இதையடுத்து மாநிலம் முழுவதும் இருந்தும் திமுகவினர் தலைமை அலுவலகத்துக்கு தொலைபேசிகள் மூலம்தொடர்பு கொண்டு கேள்விகள் கேட்ட பின்னரே இதன் சீரியஸ் தன்மையை திமுக தலைமை புரிந்து கொண்டது.

உடனே இரவோடு இரவாக ஒரு விளக்க அறிக்கையை திமுக தலைமை வெளியிட்டது. அதில், மனித உரிமைஆணையத்துக்கு உறுப்பினர்கள் நியமனம் குறித்து விவாதிக்கவே அரசுடன் பொதுச் செயலாளர் ஆலோசனைநடத்தினார். இதில் எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஜெயலலிதா, அன்பழகன், காளிமுத்து ஆகியோர் சேர்ந்து மனித உரிமை கமிஷன் உறுப்பினர்கள்நியமனம் தொடர்பாக ஒரு பட்டியலை தயார் செய்தனர். பின்னர் இந்தப் பட்டியல் ஆளுனருக்கு அனுப்பப்பட்டது.

அதில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தங்கராஜை மனித உரிமைக் கமிஷன் உறுப்பினராக நியமித்துஆளுநர் இன்று உத்தரவு பிறப்பித்தார்.

தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவி காலியாகி 1 வருடமாகிறது. தற்போது முன்னாள் நீதிபதிசம்பந்தம் மட்டுமே உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+