கோவை நீதிமன்றத்தில் கோபால்- போலீஸ் வாக்குவாதம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் வீரப்பன் கும்பலால் மாணவன் பக்தவச்சலம் கொலை செய்யப்பட்ட வழக்கில்குற்றம் சாட்டப்பட்டுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபால் கோவை 5-வது குற்றவியல் நீதிபதி முன்ஆஜர்படுத்தப்பட்டார்.

கோபால் தவிர, நக்கீரன் நிருபர்கள் சிவசுப்ரமணியம், கிருஷ்ணகுமார், தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்தசத்யமூர்த்தி ஆகியோரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை ஆகஸ்ட் 1ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி ஜஸ்டின்டேவிட் உத்தரவிட்டார்.

பின்னர் சிறிது நேரம் தனது உறவினர்களுடன் கோபால் சுதந்திரமாக பேசலாம் என்று நீதிபதி அனுமதியளித்தார்.

கோர்ட்டை விட்டு வெளியே வந்த கோபால் தனது உறவினர்களுடன் பேச வந்தார். அப்போது போலீஸாரும்பக்கத்திலேயே நெருக்கியடித்துக் கொண்டு வந்தனர்.

இதனால் கோபமடைந்த கோபால், நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே என்னைத் தொடக்கூடாது, சுதந்திரமாகபேச அனுமதிக்க வேண்டும், அவமரியாதை செய்தால் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட நேரிடும் என்றார்.

இதையடுத்து போலீசாருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார்ஒதுங்கிக் கொண்டனர். இதன் பின்னர் உறவினர்களுடன் அவர் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அவரை நிருபர்களுடன் பேச விடவில்லை. இதையடுத்து நிருபர்களைப் பார்த்தை தூரத்தில் இருந்துகையசைத்த கோபால், பொய் கேஸ் போட்ட ஜெயலலிதா அரசின் முகமூடியைக் கிழிப்பேன் என்று கோஷமிட்டார்.

இதையடுத்து அவரை அப்படியே வேனுக்குள் தளளிக் கொண்டு சென்றனர் போலீசார். பின்னர் மீண்டும் அவர்சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+