பாண்டிச்சேரி முதல்வர் மீது கண்ணன் திடுக்கிடும் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி காங்கிரஸ் முதல்வர் ரங்கசாமிக்கும், சமூக விரோதிகளுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாகமூத்த காங்கிரஸ் தலைவர் கண்ணன் புகார் கூறியுள்ளார்.

சமீபத்தில் புதுவை, உழவர் கரை நகராட்சி ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ஒரு கும்பல், ஆணையர்நாகலிங்கத்தைக் கடுமையாகத் தாக்கியது. அலுவலகத்தையும் அக்கும்பல் சூறையாடியது.

புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்திற்கும் முதல்வர் ரங்கசாமிக்கும் தொடர்புஇருப்பதாக மூத்த காங்கிரஸ் தலைவர் கண்ணன் திடுக்கிடும் புகார் கூறியுள்ளார்.

கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

புதுவை உழவர் கரை நகராட்சி ஆணையர் மீதான கொலை வெறித் தாக்குதல் குறித்து இதுவரை வழக்குப் பதிவுசெய்யப்படவில்லை. முதல்வரின் உத்தரவின் பேரில் அவரது ஆதரவாளர்கள்தான் இந்த வெறித் தாக்குதலைநடத்தியுள்ளனர். எனவேதான் வழக்குப் பதிவு செய்யாமல் உள்ளது போலீஸ்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர். அவருக்கும் பல சமூக விரோதிகளுக்கும்இடையே நெருக்கமான உறவு உள்ளது.

முதல்வர் தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் இதுகுறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் புகார்கூறுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் கண்ணன்.

2 அமைச்சர்கள், சில எம்.எல்.ஏக்களை தனது ஆதரவாளர்களாகக் கொண்டுள்ள கண்ணன், முதல்வர் மீதுபகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருப்பது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

புதுவையில் எந்த ஆட்சியும் 5 ஆண்டு கால பதவிக் காலத்தை முடித்ததில்லை என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

பொது வாழ்வில் அப்பழுக்கற்றவர், மிக எளிமையானவர், நேர்மைக்குப் பெயர் போனவர் ரங்கசாமி. அவர் மீதுகண்ணன் இப்படி தடாலடி புகார் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரசை விட்டு விலகிய கண்ணன் இரு ஆண்டுகளுத்து முன்னர் தான் மீண்டும் மன்னிப்பு கேட்டு கட்சிக்குவந்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரப்பட்டது.

இந் நிலையில் ரங்கசாமி ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளில் கண்ணன் இறங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.

ரங்கசாமி ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.கவைச் சேர்ந்த முக்கிய புள்ளியும் சாராயப் வியாபாரி ஒருவரும்கண்ணனுக்கு பின்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+