பொங்கல் முதல் புதுவை ரயில்கள் அகலப் பாதையில் செல்லும்: மூர்த்தி
பாண்டிச்சேரி:
வரும் பொங்கல் பண்டிகை முதல் பாண்டிச்சேரியிலிருந்து அகல ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கும்என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கூறியுள்ளார்.
புதுச்சேரிக்கு வந்த மூர்த்தி, முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர்கொடுத்த பேட்டியில், பாண்டிச்சேரி-விழுப்புரம் இடையிலான 38 கிலோமீட்டர் தொலைவிலான மீட்டர் கேஜ்பாதை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தீவிரமாக நடக்கிறது.
நவம்பர் மாதத்தில் இப்பணிகள் முடியும். இப்பாதையை மின்மயமாக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமிகேட்டுக் கொண்டுள்ளார். அவரது கோரிக்கை நிறைவேற்றப்படும்.
இதற்காக ஆகும் செலவான ரூ. 9 கோடியை, தெற்கு ரயில்வேயும், பாண்டிச்சேரி அரசும் சமமாக பகிர்ந்துகொள்ளும்.
அனைத்துப் பணிகளும் முடிந்த பின்னர் ஏற்கனவே இப்பாதையில் ஓடிக் கொண்டிருந்த அனைத்து ரயில்களும்மீண்டும் இயக்கப்படும்.
பாண்டிச்சேரி-சென்னை கடற்கரை, பாண்டிச்சேரி- திருப்பதி ரயில்கள் தவிர, சென்னை-விழுப்புரம் இடையிலானரயில் பாண்டிச்சேரி வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படும்.
இதேபோல, திருச்சி-நாகூர்-காரைக்கால்-திருநள்ளாறு இடையிலான ரயில் பாதை அமைக்கும் யோசனையையும்முதல்வர் தெரிவித்துள்ளார். அதுவும் பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications