லெட்டர் அனுப்பி விபச்சாரம்: மறைந்த டைரக்டரின் மனைவி கைது
சென்னை:
சென்னையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்துவதாகக் கூறி விபச்சாரத் தொழில் நடத்திய முன்னாள் போலீஸ்காரர்,மறைந்த சினிமா டைரக்டரின் மனைவி உள்ளிட்ட 11 பேர் பிடிபட்டனர்.
இவர்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் அவர்களது நண்பர்களின் முகவரிகளை வாங்கிக் கொண்டுஅவர்களுக்கு கடிதம் எழுதி வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்து வந்துள்ளது இக் கும்பல்.
கடிதம் வைத்திருப்போருக்கு மட்டுமே பெண்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கே.கே. நகர் மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்தக் கும்பல்விபச்சாரத் தொழிலை நடத்தி வந்தது. விபச்சாரம் நடந்து வந்த வீட்டில், பைனான்ஸ் கிடைக்கும் என்ற போர்டுதொங்கிக் கொண்டிருக்கும். ஆனால், அங்கு பைனான்ஸ் தொழில் ஏதும் நடப்பதில்லை.
அங்கு வருபவர்களிடம் லெட்டர் இருக்கா என்று கேட்டு, அதை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளேஅனுமதிக்கப்படுவார்களாம். இதன் பின்னர் வீட்டுக்குள் இருக்கும் பெண்களில் யாரையாவது ஒருவரை தேர்வுகொள்ளலாமாம்.
கடிதங்கள் பைனானாஸ் நிறுவனத்தின் பெயரில் எழுத்தப்படுமாம். அதே போல பைனான்ஸ் நிறுவனத்தில் வேலைபார்ப்பதாகக் கூறிக் கொண்டு பல பெண்களும் வந்து போனதால் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளவீடுகளில் வசித்தவர்களுக்கும் நெடுநாட்களாக சந்தேகம் ஏற்படவில்லை.
அதே போல பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் கேட்டுத் தான் ஆண்கள் வந்து செல்வதாகவும் நினைத்தனர்.
ஆனால், சமீபகாலமாக இந்த அலுவலகத்தில் ஏராளமான பெண்களும் ஆண்களும் இரவு வேலைகளிலும்நடமாடியதால் சந்தேகப்பட்ட பிளாட்வாசிகள் போலீசாருக்குத் தகவல் தந்தனர்.
இதையடுத்து போலீசார் ரெய்ட் நடத்தியதில் கஸ்தூரி (வயது 22), புஷ்பா (24) ஆகிய ஆந்திரப் பெண்கள்பிடிப்படனர். பைனான்ஸ் நிறுவனம் என்ற பெயரில் விபச்சார விடுதியை நடத்தி வந்த முன்னாள் போலீஸ்காரர்சபாபதி, அவரது இரண்டாவது மனைவி ராதா, பெண்களை சப்ளை செய்த ஜெயா, சாரதா ஆகியோர் உள்பட 11பேர் பிடிபட்டனர்.
இதில் சாராதாவின் கணவர் நமச்சிவாயம் மறைந்த சினிமா டைரக்டராவார். பொன்மலர், யாகசாலை போன்றபடங்களை இயக்கியவர். இவர் மறைந்ததையடுத்து விபச்சாரத் தொழிலில் இறங்கியுள்ளார் சாரதா.


