விரைவில் தேசிய அளவில் அரசியல் மாற்றம் வரலாம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆட்சியில் உள்ள பா.ஜ.கவை விரட்டியடிக்க மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கவும், அதற்காக பிற கட்சிகளுடன்கூட்டணி அமைத்துப் போட்டியிடவும் காங்கிரஸ் தயார் என்று அக் கட்சியின் தலைவர் சோனியா காந்திகூறியுள்ளார்.

இதையடுத்து விரைவில் தேசிய அளவில் அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.

சிம்லாவில் நடந்து வரும் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, மதவாதம் தான் இன்று நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதை முறியடிக்க பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை விரட்ட வேண்டும்.இதற்காக காங்கிரஸ் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து எதிர்வரும் தேர்தலை சந்திக்கவும், மத்தியில் கூட்டணிஆட்சி அமைக்கவும் தயாராக உள்ளது என்றார்.

இதுவரை மத்தியில் தனித்தே ஆட்சி என்ற நிலையில் காங்கிரஸ் இருந்து வந்தது. இப்போது அக் கட்சியின்நிலையிைல் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று சென்னையில் நிருபர்களைச் சந்தித்த கருணாநிதியிடம் இது குறித்துக் கேட்டபோது, கூட்டணிஆட்சி விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய நிலையை அக் கட்சியின் தலைவர் சோனியா காந்திவிளக்கியுள்ளார். இதனால் தேசிய அளவில் பெரிய அரசியல் மாற்றங்கள் வரலாம்.

அயோத்தி விவகாரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் இருமுறை எடுத்த முயற்சிகளும் தோற்றுவிட்டன. இதனால்நீதிமன்றத் தீர்ப்புக்கு எல்லா தரப்பினரும் கட்டுப்படுவது தான் நல்லது. நீதிமன்றம் தான் நல்ல தீர்வைத் தர முடியும்.இனியும் இதில் சங்கராச்சாரியை விட்டு தீர்வு காண முயல்வது பலனளிக்காது.

தமிழக அரசால் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாக்கப்பட்டுவிட்டனர்.இப்போது ஜெயலலிதாவிடம் மாட்டி இருப்பது அரசு ஊழியர்கள். போராட்டம் நடத்திய ஊழியர்களைகொடுமைப்படுத்துவது என்பது அராஜகத்தின் உச்சகட்டம்.

எஸ்மா சட்டத்தை திருத்தியதே தவறு. குடியரசுத் தலைவரின் ஒப்புதலே இல்லாமல் சட்டத்தை எப்படி அமலாக்கமுடியும்?

ஒரே ஒரு கையெழுத்தைப் போட்டு 3 லட்சம் பேரை டிஸ்மிஸ் செய்தது எங்கும் நடந்திராத அதிசயம்.ஜெயலலிதாவின் பிடிவாதத்தால் அரசு நிர்வாகமே முடங்கிப் போய் கிடக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். அதைப் பற்றியெல்லாம் அந்த அம்மையாருக்கு எந்தக் கவலையும் கிடையாது.

இந்த டிஸ்மிஸ் உத்தரவை அடுத்து எந்த அரசு வந்தாலும் ரத்து செய்யும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்வதுநல்லது என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+