முரசொலி மாறன் கவலைக்கிடம்
நியூயார்க்:
அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் மெதோடிஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின்உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.
முன்னதாக இந்திய நேரப்படி இன்று (புதன்கிழமை) மாலை 5 மணியளவில் மாறன் காலமானதாக செய்திகள் வந்தன. இதைதூதரகம் மறுத்துள்ளது. மாறனின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருவதாகவும் இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் அக்காள் மகனான முரசொலி மாறன், பா.ஜ.க. அமைச்சரவையில் மத்திய வர்த்தகத்துறைஅமைச்சராக உள்ளார். இந் நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லிஅகில இந்திய விஞ்ஞானக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், செயற்கையாகப்பொறுத்தப்பட்ட இருதய வால்வில் பூஞ்சை தொற்று ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். உடல் நிலைமோசமடைந்தால் கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி தனி விமானம் மூலம் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டு ஹூஸ்டன் நகரில்உள்ள மெதோடிஸ்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 8 மாதமாக அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


