கழுத்து அறுப்பு எதிரொலி: முல்லைவேந்தன் கோவை சிறைக்கு மாற்றம்
சேலம்:
சேலம் சிறையில் ரெளடிக் கும்பலால் பிளேடு மற்றம் கத்தியால் தாக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட முன்னாள்திமுக அமைச்சர் முல்லைவேந்தன் நீதிமன்ற உத்தரவுப்படி கோவை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் ராயக்கோட்டையில் நடந்த வெடிகுண்டு வழக்கில் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாகமுல்லைவேந்தன் மற்றும் நவாப் ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும்சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களை வெல்டிங் குமார் என்ற ரெளடி தலைமையிலான நான்கு பேர் கொண்ட கைதிக் கும்பல் பிளேடுமற்றும் கத்தியால் சரமாரியாகத் தாக்கியது. இதில் முல்லைவேந்தனுக்கு கழுத்து அறுபட்டது.
இதையடுத்து தங்களது தந்தையின் உயிருக்குப் பாதுகாப்பில்லை, எனவே வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றுமுல்லைவேந்தனின் மகன் கரிகாலன், மகள் இளமதி ஆகியோர் சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதைஏற்க சிறை அதிகாரிகள் மறுத்து வந்தனர்.
இதையடுத்து தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் முல்லைவேந்தனின் மகள் மனு செய்தனர். அந்த மனுவைவிசாத்த நீதிபதி, முல்லைவேந்தன் மற்றும் நவாப் ஆகியோரை கோவை சிறைக்கு மாற்ற உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இருவரும் இன்று காலை கோவைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.


