21ம் தேதி பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. துணை தேர்வு முடிவுகள்
சென்னை:
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் 3 பாடங்களில் மட்டும் தோல்வியடைந்தமாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட சிறப்பு துணைத் தேர்வுகளின் முடிவுகள் வரும் 21ந் தேதி வெளியாகின்றன.
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள், ஓராண்டை வீணாக்காமல், இந்த கல்விஆண்டிலேயே மேல்படிப்பைத் தொடர வசதியாக சிறப்பு துணைத் தேர்வு முறையை அரசு அறிமுகப்படுத்தியது.
இதற்கு மாணவ, மாணவிகள், பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்வுகளில் 3 பாடங்களில் மட்டும் தோல்வி அடைந்தவர்களுக்கு சிறப்புத் துணைதேர்வு கடந்த மாத இறுதியில் நடத்தப்பட்டது. இந்தத் துணை தேர்வுகளை சுமார் 1 லட்சம் பேர் எழுதினர்.
இந்த விடைத் தாள்களைத் திருத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதையடுத்து இத் தேர்வு முடிவுகளை வரும்21ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் சி.பழனிவேலு கூறியுள்ளார்.
இந்த தேர்வு முடிவுகளும் இணைய தளங்களில் வெளியிடப்படும். தேர்வு முடிவு வெளியாகும் தேதியில் மாணவ,மாணவிகள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களுக்கு சென்று மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.


