For Daily Alerts
Just In
கிருஷ்ணகிரி திமுக எம்.பி. தேர்வு செல்லும்: நீதிமன்றம்
சென்னை:
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த வெற்றிச் செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும்என்று செனனை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடந்தது. இதில் கிருஷ்ணகிரிதொகுதியில் திமுக சார்பில் வெற்றிச் செல்வன் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் அதிமுக சார்பில் முன்னாள்அமைச்சர் தம்பித்துரை போட்டியிட்டு தோற்றார்.
அரசு நிர்வாகத்தை தவறாகப் பயன்படுத்தி வெற்றிச் செல்வன் வெற்றி பெற்றுள்ளார். எனவே அவரது தேர்வுசெல்லாது என்று அறிவிக்கக் கோரி தம்பித்துரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே.ராஜன், வெற்றிச் செல்வன் மீதான புகார் சந்தேகத்திற்கு இடமின்றிநிரூபிக்கப்படவில்லை என்று கூறி தம்பித்துரையின் மனுவை தள்ளுபடி செய்தார்.


