இந்தியாவில் நிமிடத்துக்கு 50 குழந்தைகள் பிறப்பு
தூத்துக்குடி:
இந்தியாவில் நிமிடத்துக்கு 50 குழந்தைகள் பிறக்கின்றன.
நாளை உலக மக்கள் தொகை தினமாகும். இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணைஇயக்குனர் அ.லியாகத் அலி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
1967 ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியைத் தாண்டியது. இந்த அபாயத்தை, உலக மக்களுக்குஉணர்த்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் ஜூலை 11ம் தேதியை உலக மக்கள் தொகைதினமாக அறிவித்தது.
பெருகிவரும் மக்கள் தொகையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு இதன் மூலம் விழிப்புணர்வுஏற்படுத்தப்படுகிறது. தற்போது உலக மக்கள் தொகை 610 கோடியாக உயர்ந்துள்ளது.
இதில் 50 சதவீதம் பேர் இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேசியா, நைஜீரியா ஆகிய நாடுகளில்வசிக்கிறார்கள். உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 16 சதவீதமாகும்.
இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 104 கோடி. அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் 153கோடியாக உயர்ந்து, உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடாாக மாறிவிடும்.
இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 33 சதவீதம் குழந்தைகள் எடை குறைவாக உள்ளன. 63 சதவீதம் தாய்ப்பால்இல்லாமல் வளர்கின்றன. லட்சத்தில் 410 குழந்தைகள் பிரசவத்தின் போது இறந்து விடுகின்றன. குழந்தைகள் மரணவிகிதம் 72 சதவீதமாகவும் ஆகவும், கர்ப்பத்தின்போது காலமாகும் தாய்மார்கள் சதவீதம் 22 விகிதமாகவும்உள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications